நாம் பெரும்பாலும் அசைவ உணவுகளுக்கு பயன்படுத்தப்படும் பிரிஞ்சி அல்லது பிரியாணி இலையை பெரும்பாலும் வாசனைக்காக பயன்படுத்துவோம். அதன் வாசனை உணவின் சுவையை அதிகரிக்கிறது. ஆனால், இது நமது உடலுக்கு மிகவும் நல்லது என்பது உங்களுக்கு தெரியுமா? பிரியாணி இலையின் ஆரோக்கிய நன்மைகள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
சிறந்த செரிமானம்
வயிறு தொடர்பான நோய்களின் அறிகுறிகளைப் போக்க பிரியாணி இலை உதவுகிறது. இதை சாப்பிடுவதால் அஜீரணம் போன்ற பிரச்சனைகள் வராது. இதை தண்ணீரில் கொதிக்க வைத்தும் பயன்படுத்தலாம்.
சுவாச பிரச்சினை
ஆஸ்துமா அல்லது சளி போன்ற சுவாச பிரச்சனைகளுக்கு பிரியாணி இலை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதன் இலைகளை வேக வைத்து சாப்பிடுவதால் சுவாச ஆரோக்கியம் மேம்படும்.
கூந்தல் ஆரோக்கியம்
பிரியாணி இலை முடி பிரச்சனையை சரி செய்யவும் உதவுகிறது. பிரியாணி இலை பொடியை தயிருடன் கலந்து கூந்தலில் தடவினால் பொடுகு பிரச்சனை குறைவதோடு முடி வளர்ச்சியும் அதிகரிக்கும்.
இதய ஆரோக்கியம்
காஃபிக் அமிலம் மற்றும் ருடின் ஆகியவை பிரியாணி இலையில் காணப்படும் கரிம சேர்மங்கள். இது இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
எடையை குறைக்கும்
பிரியாணி இலை எடை குறைப்புக்கு மிகவும் உதவியாக இருக்கும். இதன் இலைகளை வேகவைத்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும். இது தவிர, செரிமானம் தொடர்பான பிரச்சனைகளையும் நீக்குகிறது.
மன அழுத்தம்
லினலூல் எனப்படும் ஒரு கலவை உடலில் உள்ள அழுத்த ஹார்மோன்களின் அளவைக் குறைக்க உதவுகிறது. இது பிரியாணி இலைகளில் காணப்படுகிறது. இதன் பயன்பாடு மனதை அமைதியாக வைத்திருக்கும்.
சர்க்கரை நோய்
நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த பிரியாணி இலை மிகவும் உதவியாக இருக்கும். இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகளை குறைக்கலாம்.