துளசி விதை தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் அதிசய நன்மைகள்

By Gowthami Subramani
29 May 2024, 13:30 IST

துளசி விதை நீர்

துளசி விதைகளை தண்ணீரில் ஊறவைத்து அருந்துவது உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு நன்மைகளைத் தருகிறது. இந்த எளிய மற்றும் புத்துணர்ச்சியூட்டும் பானத்தை அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் சிலவற்றைக் காணலாம்

ஊட்டச்சத்துக்கள் நிறைந்த

இந்த விதையில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இது உடலை நீரேற்றமாக வைப்பதுடன் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது

எடை மேலாண்மை

துளசி விதை நீரில் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இது வயிறு நிரம்பிய முழுமை உணர்வைத் தருகிறது. இதனை உட்கொள்வது பசியைக் கட்டுப்படுத்தவும், எடை மேலாண்மைக்கும் உதவுகிறது

செரிமான ஆரோக்கியத்திற்கு

துளசி விதைகளில் உள்ள நார்ச்சத்துக்கள் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இது குடல் சீரான தன்மையை ஊக்குவிக்கவும், வயிற்று உப்புசம் மற்றும் மலச்சிக்கல் போன்ற செரிமான கோளாறுகளை போக்கவும் உதவுகிறது

குளிர்ச்சியூட்டும் தன்மை

துளசி விதைகள் உடலில் இயற்கையாகவே குளிர்ச்சித் தன்மையை ஏற்படுத்துகின்றன. எனவே கோடைக்காலங்களில் வெப்பத்தை எதிர்த்துப் புத்துணர்ச்சியூட்டும் பானமாக துளசி விதை நீர் அமைகிறது

இரத்த சர்க்கரை மேம்பாட்டிற்கு

சில ஆய்வுகளில் துளசி விதைகள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுவதாகக் கூறப்படுகிறது. இது நீரிழிவு நோயாளிகள் அல்லது இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க விரும்புவோர்க்கு மிகுந்த நன்மை பயக்கும்

வீக்கத்தைக் குறைக்க

இதில் உள்ள ஆக்ஸிஜனேற்ற பண்புகள் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்துப் போராடவும், வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது. இதன் மூலம் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும், நல்வாழ்விற்கும் பங்களிக்கிறது