நெல்லிக்காயை தேனில் குழைத்து சாப்பிட்டா இந்த பிரச்சனை எல்லாம் வராதாம்

By Gowthami Subramani
22 Jan 2024, 09:38 IST

நெல்லிக்காயை தேனில் குழைத்து சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இதன் மருத்துவ குணங்கள் பல்வேறு நோய்களைத் தடுக்க உதவுகிறது

நிபுணர் கருத்து

ஊட்டச்சத்து நிபுணர் மற்றும் உடற்பயிற்சி நிபுணருமான நுபுர் பாட்டீல் அவர்கள் கூறுகையில் நெல்லிக்காயை தேனில் கலந்து சாப்பிடுவது சளி, இருமல் மற்றும் தொண்டை வலி போன்றவை குணமாகலாம். இது உடலில் இன்சுலின் அளவை அதிகரிக்க உதவுகிறது

ஆஸ்துமா நோயாளிகளுக்கு

நெல்லிக்காய் மற்றும் தேன் கலந்து சாப்பிடுவது ஆஸ்துமா நோயாளிகளுக்கு மிகவும் நன்மை பயக்கும். இதன் நுகர்வு சுவாச பிரச்சனைகளை நீக்குகிறது. இது சுவாசக் குழாயை சுத்தம் செய்ய உதவுகிறது

சருமத்திற்கு நன்மை தர

தேன் மற்றும் ஆம்லா உட்கொள்வது சரும ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இதன் ஆன்டி ஆக்ஸிடன்ட் பண்புகள் சருமத்தை மென்மையாக மற்றும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது

முடி ஆரோக்கியத்திற்கு

நெல்லிக்காய் முடி ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். நெல்லிக்காயை தேனில் குழைத்து சாப்பிட்டால் கூந்தல் வலுவடையலாம். அது மட்டுமில்லாமல் முடியை ஆரோக்கியமாக மற்றும் மென்மையாக வைக்க உதவுகிறது

விந்தணு எண்ணிக்கை அதிகரிக்க

தேன் மற்றும் ஆம்லா கலவை ஆண்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். இவற்றை உட்கொள்வது விந்தணுக்களின் தரம் மற்றும் எண்ணிக்கை அதிகரிக்கிறது

நோயெதிர்ப்புச் சக்தி அதிகரிக்க

தேனுடன் நெல்லிக்காய் சேர்த்து சாப்பிடுவது உடலின் நோயெதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். இதன் நுகர்வு பல்வேறு நோய்களைக் குணப்படுத்த உதவுகிறது

தேன் மற்றும் நெல்லிக்காய் சேர்த்து சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு நன்மைகளைத் தரலாம்