பாதாம் மாவு
பாதாம் பருப்பிலிருந்து பாதாம் மாவு தயாரிக்கப்படுகிறது. இதில் உள்ள புரதம், நார்ச்சத்துக்கள், ஆரோக்கியமான கொழுப்புகள் போன்றவை உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு நன்மைகளைத் தருகிறது
பசையம் உணர்திறன் உள்ளவர்களுக்கு
பாதாம் மாவு கெட்டோஜெனிக் அல்லது குறைந்த கார்போஹைட்ரேட் உணவுகளுக்கு ஏற்றதாக அமைகிறது. இது பசையம் இல்லாத தன்மையாக இருப்பதால், பசையம் உணர்திறன் உள்ளவர்களுக்கும் பாதாம் மாவு ஏற்றதாகும்
நார்ச்சத்துக்கள் நிறைந்த
பாதாம் மாவு நார்ச்சத்துக்கள் நிறைந்த மூலமாகும். இதில் கோதுமை மாவை விட அதிக நார்ச்சத்துக்கள் உள்ளது. இவற்றை உட்கொள்வது நீண்ட நேரம் முழுமை உணர்வைத் தந்து பசியின்மையைத் தடுக்கிறது
நீரிழிவு நோய்க்கு
பாதாம் மாவில் குறைந்த கிளைசெமிக் குறியீடு நிறைந்துள்ளது. மேலும் இதில் மக்னீசியம் உள்ளது. இது இரத்த சர்க்கரையை நிர்வகிக்க உதவுகிறது
எலும்பு ஆரோக்கியத்திற்கு
பாதாம் மாவில் எலும்புகளுக்குத் தேவையான கால்சியம் சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த மாவைத் தொடர்ந்து உட்கொள்வது எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது
இரத்த அழுத்தத்தைக் குறைக்க
பாதாம் மாவில் உள்ள ஊட்டச்சத்துக்கள் இரத்த அழுத்த அளவைக் குறைக்க உதவுகிறது. பாதாம் பருப்பை அதிகம் சாப்பிடுபவர்களின் இரத்த அழுத்த அளவு கணிசமாகக் குறைவதை உணர்த்துகிறது
இதய நோய்க்கு
பாதாம் மாவை சேர்ப்பது இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். ஆய்வு ஒன்றில் பாதாம் பருப்புகளை உட்கொள்வது நோயாளிகளுக்கு இதய நோய் அபாயத்தைக் குறைப்பதாகக் கூறப்படுகிறது
புற்றுநோயைத் தடுக்க
பாதாம் மாவில் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பண்புகள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளது. இவை ஆக்சிஜனேற்றத்தால் உடலில் ஏற்படும் செல் சேதத்தை குறைத்து புற்றுநோயைத் தடுக்க உதவுகிறது