தினமும் சோம்பு தண்ணீர் குடித்தால் இவ்வளவு நல்லதா?

By Kanimozhi Pannerselvam
06 Apr 2025, 23:53 IST

செரிமானத்துக்கு

சோம்பு தண்ணீர் செரிமானத்தை மேம்படுத்துகிறது, அஜீரணம், வாயு, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவுகிறது.

கண் பார்வைக்கு

சோம்பில் உள்ள கரோட்டினாய்ட்ஸ் (carotenoids) எனப்படும் கலவை கண்களின் பார்வையைத் தெளிவுபடுத்துகிறது, மங்கலான பார்வை, கண்களில் நீர் வடிதல் போன்ற பிரச்சனைகளைத் தீர்க்கிறது.

ரத்தத்தை சுத்திகரிக்கும்

சோம்பு ரத்தத்தை சுத்திகரிக்க உதவுகிறது, இது உடலுக்குத் தேவையான ஆக்சிஜனை எடுத்துச் செல்லவும், நச்சுகளை வெளியேற்றவும் உதவுகிறது.

மாதவிடாய் வலியை போக்கும்

மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலியைப் போக்க சோம்பு தண்ணீர் உதவுகிறது.

எடை இழப்புக்கு

சோம்பு தண்ணீர் பசியை கட்டுப்படுத்தி, வளர்சிதை மாற்றத்தை தூண்டி, எடை இழப்புக்கு உதவுகிறது.

புற்றுநோயிலிருந்து பாதுகாக்கும்

சோம்பில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் பண்புகள் புற்றுநோயிலிருந்து பாதுகாக்கிறது.

பருக்களை நீக்கும்

சோம்பு தண்ணீர் பருக்களால் ஏற்படும் வீக்கத்தை குறைத்து, பருக்களை நீக்க உதவுகிறது.

இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது

சோம்பு ரத்த ஓட்டத்தை சீராக்கி, இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.

உடலை நச்சு நீக்கம் செய்கிறது

சோம்பு கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களை நச்சு நீக்கம் செய்ய உதவுகிறது.

தூக்கத்தை மேம்படுத்துகிறது

சோம்பு தூக்கத்தை மேம்படுத்துகிறது, தூங்கப் போவதற்கு முன் சோம்புத் தண்ணீர் குடித்தால் நல்ல தூக்கம் வரும்.