பாலை காய்ச்சாமல் குடித்தால் என்னென்ன பாதிப்புகள் வரும்?

By Kanimozhi Pannerselvam
28 Mar 2025, 12:49 IST

வைரஸ் பாதிப்பு

காய்ச்சாத பாலில் ஈ. கோலை, சால்மோனெல்லா, லிஸ்டீரியா போன்ற தீங்கு விளைவிக்கக்கூடிய பாக்டீரியாக்கள் அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளது. இதனால் வயிற்று வலி, வாந்தி, மலச்சிக்கல் அல்லது திடீர் பேதி ஏற்படலாம்.

நோயெதிர்ப்பு சக்தி குறையலாம்

குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், வயதானவர்கள் மற்றும் குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்கள் இதனால் மிகவும் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

குடல் ஆரோக்கியம்

காய்ச்சாத பாலில் இருக்கும் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் குடல் மைக்ரோபையோட்டாவை பாதிக்கக்கூடும். இது ஜீரண கோளாறுகளை உருவாக்கலாம்.

ஹார்மோன் சமநிலையை மாற்றலாம்

நாட்கள் கடந்த பசு பாலில் இருக்கும் சில இயற்கை ஹார்மோன்கள் சர்க்கரை அளவை அதிகரிக்கவும், ஹார்மோன் சமநிலையை பாதிக்கவும் வாய்ப்பு உள்ளது.

எலும்புகளின் ஆரோக்கியத்திற்குப் பாதிப்பு

பாலில் உள்ள கால்சியம் உடலில் எளிதாக உறிஞ்சிக்கொள்ள பாச்சரீஸ் செய்யப்படாத பால் மிகவும் உதவாது. அதனால், உடல் தேவையான கால்சியத்தை பெற முடியாமல், எலும்புகளின் பலம் குறையலாம்.

அலர்ஜி

கடுமையான பால் அலர்ஜி அல்லது இலாக்ஷஸ் இன்டொலரன்ஸ் உள்ளவர்கள் காய்ச்சாத பால் குடிக்கும்போது அதிகம் பாதிக்கப்படலாம்.