கிரீன் டீ vs கிரீன் காபி - உடல் எடையைக் குறைக்க எது சிறந்தது?
By Kanimozhi Pannerselvam
21 Jan 2024, 10:30 IST
கிரீன் காபி என்றால் என்ன?
பொதுவாக காபி கொட்டைகள் வறுக்கப்பட்டு அரைக்கப்படுகின்றன. ஆனால் வறுக்காமல் தயாரிக்கப்படக்கூடிய காபி கொட்டைகள் க்ரீன் காபி என அழைக்கப்படுகிறது. மேலும் வறுக்கப்படாத காபி கொட்டைகளில் ஊட்டச்சத்துக்களின் நன்மைகள் நிறைந்திருக்கும் என்பதால், இது க்ரீன் டீயை விட ஆரோக்கியமானது எனக்கூறப்படுகிறது.
கிரீன் காபி நன்மைகள்
சில ஆய்வுகள் பச்சை காபி எடையை கட்டுப்படுத்த உதவுகிறது என்று காட்டுகின்றன. கிரீன் காபி சரியான செரிமானத்தை பராமரிக்கிறது, இது எடை அதிகரிப்புக்கு வழிவகுக்காது.
க்ரீன் காபி உட்கொள்வதால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும். இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது, இது டைப்-2 நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும்.
கிரீன் காபி நன்மைகள்
கிரீன் காபியில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் வீக்கத்தைக் குறைத்து இரத்த நாளங்களின் செயல்பாட்டைப் பராமரிக்கின்றன, இதனால் இதயம் தொடர்பான நோய் அபாயத்தைக் குறைக்கிறது.
கிரீன் காபி நன்மைகள்
க்ரீன் காபியில் குளோரோஜெனிக் அமிலம் உள்ளது, இது உடலின் வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்த உதவும் என்று நம்பப்படுகிறது. இதை குடிப்பதால் கொழுப்பை எரிக்க உதவுகிறது மற்றும் ஆற்றல் பற்றாக்குறை ஏற்படாது.
கிரீன் காபி நன்மைகள்
க்ரீன் காபியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன, இது உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றி, ஆரோக்கியமான சருமம் மற்றும் கூந்தலுக்கு வழிவகுக்கும்.