குழந்தைகளின் எலும்புகளை வலுப்படுத்த வைட்டமின் டி மற்றும் கால்சியம் நிறைந்த சில பானங்கள் உதவுகிறது. இந்த பானங்களை அருந்துவது குழந்தைகளின் வளர்ச்சிக்கும், அவர்களின் எலும்புகளை வலுப்படுத்தவும் உதவுகின்றன
பால்
பால் ஆனது வைட்டமின் டி மற்றும் கால்சியம் போன்றவற்றின் சிறந்த மூலமாகும். இவை வலுவான எலும்புகளை உருவாக்க உதவுகிறது
தயிர்
இது கால்சியம் மற்றும் புரோபயாடிக்குகள் நிறைந்த நல்ல மூலமாகும். இதை குழந்தைகளுக்குத் தருவது செரிமானத்தை மேம்படுத்துகிறது
பாதாம் பால்
இது கால்சியம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த நல்ல மூலமாகும். மேலும் பால் குடிக்காத குழந்தைகளுக்கும் கூட பாதாம் பால் ஒரு நல்ல தேர்வாக அமைகிறது
ஆரஞ்சு சாறு
இதில் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் டி ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இது குழந்தைகளின் எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது
திராட்சை சாறு
திராட்சை வைட்டமின் சி மற்றும் கால்சியம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாகும். குழந்தைகளுக்கு திராட்சைச் சாறு கொடுப்பது எலும்புகளுக்கு நன்மை பயக்கும்
ஓட்ஸ் பால்
ஓட்ஸ் பால் வைட்டமின் டி மற்றும் கால்சியம் ஆகியவற்றின் நல்ல மூலமாகும். பால் குடிக்க விரும்பாத குழந்தைகளுக்கு ஓட்ஸ் பால் ஒரு நல்ல மாற்றாகும்
பச்சை இலை காய்கறி சாறு
முட்டைக்கோஸ், வெந்தயம், பசலைக்கீரை போன்ற பச்சை இலைக் காய்கறிகளின் சாறு கால்சியம் மற்றும் மெக்னீசியம் நிறைந்ததாகும். இவை எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது