டெங்கு காய்ச்சலால் பிளேட்லெட் குறைஞ்சிடுச்சா? இந்த பழங்களை சாப்பிடுங்க

By Gowthami Subramani
20 May 2024, 09:00 IST

டெங்கு காய்ச்சல்

மழைக்காலங்களில் ஏடிஸ் என்ற கொசு வகைகள் குடிப்பதன் மூலம் டெங்கு காய்ச்சல் ஏற்படுகிறது. இது உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை குறைத்து பல்வேறு உடல்நல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது

குறைந்த இரத்த பிளேட்லெட்டுகள்

டெங்கு பாதிப்பு உடலில் பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கையைக் குறைக்கிறது. இந்நிலை த்ரோம்போசைட்டோபீனியா என்றழைக்கப்படுகிறது. இந்த குறைந்த பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க சில பழங்களை உட்கொள்ளலாம்.

மாதுளை

மாதுளம்பழம் அழற்சி எதிர்ப்பு, ஆக்ஸிஜனேற்ற மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது. இது உடலில் இரத்த பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது

பப்பாளி

பப்பாளியில் உள்ள என்சைம்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் பிளேட்லெட்டுகளின் உற்பத்தியைத் தூண்டுகிறது. இதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவுகிறது

திராட்சை

திராட்சையை தினமும் உட்கொள்வதன் மூலம் சிவப்பு இரத்த அணுக்கள் மற்றும் பிளேட்லெட் எண்ணிக்கையை அதிகரிக்கலாம். மேலும் இது இரும்புச்சத்து குறைபாட்டை நீக்கி இரத்த பிளேட்லெட் எண்ணிக்கை அதிகரிப்பிற்கு காரணமாகிறது

கிவி

கிவி பழம் பிளேட்லெட் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும் வைட்டமின் சி நிறைந்த சிறந்த மூலமாகும். இதில் உள்ள ஆக்ஸிஜனேற்றங்கள் செல் ஆக்சிஜனேற்றத்தைத் தடுக்க உதவுகிறது. மேலும், பிளேட்லெட்டுகளின் இயல்பான செயல்பாட்டை ஆதரிக்கிறது

ஆம்லா

இந்திய நெல்லிக்காய் என்றழைக்கப்படும் ஆம்லாவில் வைட்டமின் சி மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் அதிகம் உள்ளது. இவை பிளேட்லெட்டுகளின் உற்பத்தியை ஊக்குவிக்கவும், இயற்கையாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது

பூசணிக்காய்

இயற்கையாக பிளேட்லெட் எண்ணிக்கையை அதிகரிக்க பூசணிக்காயை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இதில் உள்ள வைட்டமின் ஏ சத்துக்கள், எலும்பு மஜ்ஜையை அதிக பிளேட்லெட்டுகளை உற்பத்தி செய்ய தூண்டுகிறது