சளி, இருமல் இருந்தாலும் இந்த பழங்களை சாப்பிடலாம்

By Gowthami Subramani
02 Jan 2025, 18:00 IST

குளிர்ந்த காலநிலையின் போது இருமல், சளி போன்றவை ஏற்படலாம். இதில் இருமல் மற்றும் சளி இருக்கும் போது நாம் சில பழங்களை எடுத்துக் கொள்ளலாம். இதில் இருமல், சளியின் போது சாப்பிட வேண்டிய பழங்கள் சிலவற்றைக் காணலாம்

மாதுளை

மாதுளை சாற்றில் அதிக அளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட் 'ஃபிளாவனாய்டு' உள்ளது. இது உடலில் வைரஸ்களின் வளர்ச்சியைத் தடுக்க உதவுகிறது. மேலும், மாதுளை சாற்றில் அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளது

எலுமிச்சை

இது வைட்டமின் சி நிறைந்த பழமாகும். வைட்டமின் சி ஆனது உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவுகிறது. எனவே இது இருமல் மற்றும் சளி தொற்றுகளில் இருந்து உடலை பாதுகாக்க உதவுகிறது

வாழைப்பழங்கள்

இருமல், சளி போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வாழைப்பழங்களை சாப்பிடுவது அறிகுறிகளின் சரிவுக்கான வாய்ப்புகளை கணிசமாகக் குறைக்கிறது. மேலும், இது நோய்வாய்ப்பட்ட உடலுக்கு முக்கியமான ஊட்டச்சத்துக்களை வழங்குவதோடு, அதை விரைவாக மீட்கவும் உதவுகிறது

ஸ்ட்ராபெர்ரிகள்

ஸ்ட்ராபெர்ரியில் வைட்டமின் சி, மாங்கனீசு மற்றும் உணவு நார்ச்சத்துக்கள் போன்றவை நிறைந்துள்ளது. இந்த கலவைகள் நீண்ட காலத்திற்கு இருமல் மற்றும் சளிக்கு எதிராக ஒரு சக்திவாய்ந்த தேர்வாக அமைகிறது

ஆப்பிள்கள்

ஆப்பிளில் ஃபிளாவனாய்டுகள் நிறைந்துள்ளது. இது நீரிழிவு, புற்றுநோய் மற்றும் இதய நோய் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. மேலும் இது இருமல் மற்றும் சளி போன்றவற்றிலிருந்து பாதுகாக்க வலுவான நோயெதிர்ப்பு அமைப்பை உருவாக்குகிறது

கிவி

இருமல் மற்றும் சளி நோய்த்தொற்றுகளைத் தடுக்கவும், உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கவும் கிவி ஒரு சிறந்த தேர்வாகும். கிவியில் உள்ள சில நுண்ணூட்டச்சத்துக்கள் இரத்த ஓட்டத்தில் வெள்ளை இரத்த அணுக்களின் இயக்கத்தை அதிகரித்து கிருமிகள் உட்செல்வதைத் தடுக்கிறது

அன்னாச்சிப்பழம்

அன்னாசியில் 'ப்ரோமலின்' என்ற நொதி உள்ளது. இது சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்புப் பண்புகளைக் கொண்டுள்ளது. இது சளி மற்றும் இருமல் நிலைமைகளை எதிர்த்துப் போராட உதவுகிறது