எடை குறைப்பு பயணத்தின் போது.. இந்த பழங்களை சாப்பிடக்கூடாது.!

By Ishvarya Gurumurthy G
25 Dec 2024, 00:05 IST

சில பழங்கள் உடல் எடையை திறம்பட குறைக்க உதவும் உணவுப் பட்டியலில் இடம் பெறாது. முக்கியமாக அவை அதிகப்படியான இனிப்பு அல்லது அதிக கலோரி எண்ணிக்கையைக் கொண்டிருக்கும். உடல் எடையை குறைக்க முயற்சிக்கும் போது நீங்கள் சாப்பிடக்கூடாத பழங்களைப் பற்றி இங்கே தெரிந்துக்கொள்வோம்.

அவகேடோ

அவகேடோ ஆரோக்கியமான கொழுப்புகளின் நல்ல ஆதாரமாக இருந்தாலும், கலோரிகள் அதிகம் கொண்டவை. இதை உங்கள் உணவில் இருந்து முற்றிலுமாக நீக்க வேண்டும் என்று அர்த்தமல்ல, இந்த பழத்தை மிதமாக சாப்பிடுவது நல்லது.

தேங்காய்

தேங்காய் நீர் ஆரோக்கியத்திற்கு சிறந்தது என்று கருதப்பட்டாலும், அதன் வெள்ளை சதையில், கலோரிகள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் உள்ளன. எனவே, எடையைக் கவனிப்பவர்கள் அதிலிருந்து விலகி இருக்கலாம்.

உலர் பழங்கள்

உலர் பழங்களான கொடிமுந்திரி, திராட்சை மற்றும் பலவற்றில் நீர்ச்சத்து இல்லாததால் அதிக கலோரிகள் உள்ளன. ஆகையால் உலர்ந்த பழங்களை குறைந்த அளவில் சாப்பிடுவது நல்லது.

வாழைப்பழம்

வாழைப்பழம் மிகவும் ஆரோக்கியமானது, ஆனால் அதை நீங்கள் அதிகமாக சாப்பிட முடியாது. வாழைப்பழத்தில் கலோரிகள் மற்றும் அதிகப்படியான இயற்கை சர்க்கரைகள் உள்ளன. ஆகையால் ஒரு நாளைக்கு ஒரு வாழைப்பழம் சாப்பிடுவது நல்லது.

அன்னாசி மற்றும் மாம்பழம்

அன்னாசி மற்றும் மாம்பழம் போன்ற வெப்பமண்டல பழங்கள் உங்கள் எடை இழப்பு திட்டங்களுக்கு இடையூறாக மறைந்திருக்கும் கலோரிகளைக் கொண்டிருக்கலாம். அதிக இனிப்பு கொண்ட இந்த பழங்களை தவிர்ப்பது நல்லது.