இன்று பலரும் சந்திக்கும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்று செரிமான பிரச்சனையும் ஒன்று. செரிமானத்தை மேம்படுத்தவும், சீராக இயக்கவும் உதவும் பழங்களைக் காணலாம்
பெர்ரி
ஸ்ட்ராபெர்ரிகள், ப்ளாக்பெர்ரிகள், ராஸ்பெர்ரிகள் போன்ற பெர்ரி பழங்களில் ஆக்ஸிஜனேற்றங்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் உள்ளது. இவை குடல் ஆரோக்கியம் மற்றும் செரிமானத்தை மேம்படுத்துகிறது
பப்பாளி
பப்பாளியில் பப்பெய்ன் என்ற என்சைம் உள்ளது. இவை புரதங்களை உடைத்து செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. இதில் உள்ள நீர் மற்றும் நார்ச்சத்துக்கள் செரிமானத்தை மேம்படுத்தி, செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது
ஆப்பிள்
ஆப்பிளில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது குடலில் சேரும் அழுக்குகளை வெளியேற்ற உதவுகிறது
வாழைப்பழம்
வாழைப்பழத்தில் நீர்ச்சத்துக்கள், நார்ச்சத்துக்கள் மற்றும் பொட்டாசியம் போன்றவை உள்ளது. இவை செரிமானத்தை மேம்படுத்துகிறது. இதில் உள்ள நார்ச்சத்துக்கள் வாயு மற்றும் வயிற்றுப் பிடிப்பு போன்ற பிரச்சனைகளைத் தவிர்க்க உதவுகிறது
கிவி
கிவி பழத்தில் ஆக்டெனிடின் என்ற நொதி உள்ளது. இவை செரிமான பிரச்சனைகளைப் போக்க உதவுகிறது. கிவி பழத்தின் ஊட்டச்சத்துக்கள் மலச்சிக்கல், வயிற்று அசௌகரியம் மற்றும் ஆசிட் ரிஃப்ளக்ஸ் போன்ற இரைப்பை குடல் அறிகுறிகளை மேம்படுத்துகிறது
அவகேடோ
அவகேடோவில் நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இது செரிமானத்தை மேம்படுத்த உதவும் சிறந்த ஃபுரூட் ஆகும்
மாம்பழம்
மாம்பழத்தில் பாலிபினால்கள், அமிலேஸ் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை மலச்சிக்கலைத் தவிர்க்கவும், செரிமான அமைப்பை உறுதிப்படுத்தவும் உதவுகிறது
பேரிக்காய்
பேரிக்காயில் உள்ள நார்ச்சத்துக்கள் வயிறு மற்றும் குடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் நச்சுகளை அகற்றவும், குடல் இயக்கத்தை எளிதாக்கவும் உதவுகிறது