தவறான உணவு பழக்கத்தால் உடலில் இரத்த பற்றாக்குறை ஏற்படுகிறது. உடலில் இரத்தம் இல்லாததால் பல பிரச்சனைகள் வருகிறது. ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவும் பழங்களை பார்க்கலாம்.
மாதுளை சாப்பிடுங்கள்
மாதுளையை சாப்பிட்டு வர உடலில் இரத்த பற்றாக்குறையை அதிகரிக்கலாம். மாதுளையில் வைட்டமின்-சி, வைட்டமின்-ஏ, இரும்புச்சத்து போன்ற சத்துக்கள் இரத்தத்தை அதிகரிக்க உதவும்.
வாழைப்பழம்
வாழைப்பழம் உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுகிறது. வாழைப்பழத்தில் இரும்புச்சத்து உள்ளது. இது உடலில் இரத்தத்தின் அளவை அதிகரிக்க உதவுகிறது.
ஆப்பிள்
ஆப்பிள் உடலில் ஹீமோகுளோபினை அதிகரிக்க உதவுகிறது. தினமும் ஆப்பிளை சாப்பிட்டு வந்தால் உடலில் இரத்த சோகை ஏற்படாது.
ஆரஞ்சு
வைட்டமின் சி ஆரஞ்சு பழத்தில் உள்ளது. இது உடலில் உள்ள ஹீமோகுளோபின் குறைபாட்டை நீக்குகிறது. இது உடலில் நீரச்சத்து குறைபாட்டை நீக்குகிறது.
திராட்சை
உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க திராட்சையை உட்கொள்ளலாம். இது உடல் பலவீனத்தை நீக்குகிறது.