இந்த பழங்களின் தோலில் மட்டும் எவ்வளவு சக்தி இருக்கு தெரியுமா?
By Kanimozhi Pannerselvam
29 Dec 2023, 11:39 IST
முடிவில்லா ஊட்டச்சத்துக் களஞ்சியம்
பழத்தோல்களில் பைட்டோ கெமிக்கல் கலவைகள், எஷன்சியல் ஆயில்கள், என்சைம்கள், லிமோனின், பாரஃபின் மெழுகுகள், ட்ரைடர்பெனாய்டுகள், கொழுப்பு அமிலங்கள், கரோட்டினாய்டுகள், குளோரோபில்கள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் உள்ளன. இந்த நுண்ணூட்டச்சத்துக்கள் பெரும்பாலான உணவுப் பொருட்களில் கிடைப்பது கிடையாது.
என்னென்ன சத்துக்கள் உள்ளது?
பழத்தோல்களில் நிறைந்துள்ள ஆக்ஸினேற்ற பண்புகள், உறுப்பு திசுக்களுக்கு ஃப்ரீ ரேடிக்கல் சேதத்தை குறைக்க உதவுகிறது. இதிலுள்ள அதிக நார்ச்சத்து நல்ல குடல் ஆரோக்கியம், குடல் இயக்கம், சரியான செரிமானம் மற்றும் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.
வாழைப்பழத் தோலில் நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் உள்ளன. மேலும் வாழைப்பழத் தோலில் 71% முதல் 83% வரை நார்ச்சத்து உள்ளது.
கிவி
கிவி பழத்தின் தோலில் வைட்டமின்கள் சி மற்றும் ஈ ஆகியவை உள்ளன. இது உடலில் ஆக்ஸிஜனேற்ற சேதம் மற்றும் ஃப்ரீ ரேடிக்கல்களைத் தடுக்கிறது. கிவி பழத்தின் தோலை உட்கொள்வதால் 50 சதவீத நார்ச்சத்து,32 சதவீத ஃபோலேட், மற்றும் 34 சதவீத வைட்டமின் ஈ சத்துக்கள் உள்ளன.
மாம்பழம்
மாம்பழத் தோலில் நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் தாமிரம் போன்ற தாதுக்கள், வைட்டமின்கள் ஏ, சி, ஈ மற்றும் பி6 ஆகியவை நிறைந்துள்ளன. சர்க்கரை நோய் மற்றும் புற்றுநோய்க்கு எதிராக மருத்துவ ரீதியாக உதவும் பாலிபினால்கள், கரோட்டினாய்டுகள், உயர் ட்ரைடர்பீன்கள் மற்றும் ட்ரைடர்பெனாய்டுகள் ஆகியவையும் நிறைந்துள்ளது.
ஆரஞ்சு
ஆரஞ்சு தோல்களில் ஹெஸ்பெரிடின் மற்றும் நரிங்கின் போன்ற ஃபிளாவனாய்டுகள் மற்றும் கிளைகோசைடுகள் உள்ளன, அவை சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றிகளாக செயல்படுகின்றன.