அன்றாட உணவில் பெருங்காயம் பல்வேறு வகைகளில் சேர்க்கப்படுகிறது. இதை உட்கொள்வது நம் உடலுக்குப் பல்வேறு நன்மைகளைத் தருகிறது. இதில் பெருங்காயம் கலந்த நீரைக் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளைக் காணலாம்
செரிமான ஆரோக்கியத்திற்கு
பெருங்காயம் கார்மினேட்டிவ் மற்றும் ஆண்டிஸ்பாஸ்மோடிக் பண்புகளைக் கொண்டுள்ளது. இது உடலில் ஏற்படும் வீக்கம், வாயு மற்றும் அஜீரணத்தைக் குறைக்க உதவுகிறது
இரத்த சர்க்கரையை சீராக்க
பெருங்காய நீர் அருந்துவது உடலில் இரத்த சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்தவும், இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தவும் உதவுகிறது. இந்த நீர் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும்
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க
பெருங்காய நீரில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு குணங்கள் நிறைந்துள்ளது. இது உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதன் மூலம் பல்வேறு நோய்த்தொற்றுக்களிலிருந்து உடலைப் பாதுகாக்கிறது
சுவாச ஆரோக்கியத்திற்கு
பெருங்காயத்தில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளது. இது காற்றுப்பாதைகளில் உள்ள சளியை சுத்தம் செய்வதன் மூலம் இருமல், ஆஸ்துமா மற்றும் நெரிசலைப் போக்க உதவுகிறது
அமிலத்தன்மையை நீக்குவதற்கு
வெறும் வயிற்றில் பெருங்காயம் நீரை உட்கொள்வது வயிற்று அமிலத்தை நடுநிலையாக்க உதவுகிறது. இதன் மூலம் நெஞ்செரிச்சல் மற்றும் அமிலத்தன்மை போன்றவற்றைத் தடுக்கலாம்
தயாரிக்கும் முறை
பெருங்காய நீர் தயார் செய்வதற்கு வெதுவெதுப்பான நீரில் ஒரு சிட்டிகை பெருங்காயத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் சுவைக்காக விரும்பினால் தேன் அல்லது எலுமிச்சை சேர்க்கலாம். இதில் சிறந்த நன்மைகளைப் பெற இதை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். எனினும், இதை அதிகப்படியாக எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்