அடுப்புக்கு பக்கத்துல இந்த பொருட்கள வச்சா சீக்கிரம் கெட்டுடும்!

By Kanimozhi Pannerselvam
04 Oct 2024, 16:00 IST

முட்டை

சிலர் கேஸ் அடுப்புக்கு அருகில் முட்டையை வைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அடுப்புக்கு அருகே எப்போதும் சூடாக இருக்கும் என்பதால், அத்தகைய இடங்களில் அதிக பாக்டீரியாக்கள் உருவாகும். இதனால் முட்டைகள் விரைவில் கெட்டுவிடும்.

ரொட்டி

காபி மற்றும் டீயுடன், அனைவருக்கும் பிடித்த ரொட்டி சமையலறை கவுண்டர் டாப்பில் வைக்கப்படுகிறது. இதன் விளைவாக, ரொட்டியில் ஈரப்பதம் அதிகரித்து விரைவில், கெட்டுப்போகும்.

வெங்காயம்

பலரும் சந்தையில் வெங்காயத்தை வாங்கி கிச்சன் கவுண்டர் டாப்பில் ஒரு கூடையிலோ அல்லது கேஸ் அடுப்புக்கு அருகில் உள்ள இடத்திலோ வைப்பார்கள். ஆனால் நீண்ட நாட்கள் இப்படியே வைத்திருந்தால் அவை துளிர்விடக்கூடும்.

தக்காளி

தக்காளியை சேமிப்பதற்கு கவுண்டர் டாப் சிறந்த இடமல்ல.திறந்த வெளியில் வைத்தால் விரைவில் கெட்டுவிடும். இருண்ட இடத்தில் வைப்பது நல்லது. தக்காளி கெட்டுப் போகாமல் இருக்க குளிர்சாதனப் பெட்டியில் வைப்பது நல்லது.

உருளைக்கிழங்கு

கேஸ் அடுப்புக்கு அருகில் உருளைக்கிழங்கை சேமிக்கக்கூடாது. ஏனெனில் கிச்சன் கவுண்டர் டாப் மேல் விழும் வெளிச்சம் அதனை விரைவிலேயே முளைக்க வைக்கும்.