மறந்தும் இந்த உணவுகளை பச்சையாக சாப்பிடாதீங்க. உயிருக்கே ஆபத்தாம்.

By Gowthami Subramani
02 Jan 2024, 13:05 IST

சில உணவுகள் ஆரோக்கியமானவையாக இருப்பினும், அதை வேகவைக்காமல் பச்சையாக எடுத்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்தைப் பெரிதும் பாதிக்கலாம். இதில், பச்சையாக சாப்பிடக் கூடாத உணவுகள் என்னென்ன என்பதைக் காண்போம்

ராஜ்மா

இதில் புரதம் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் அதிகளவு உள்ளது. எனினும் இதை வேகவைக்காமல் பச்சையாக உண்பது குமட்டல், செரிமான பிரச்சனைகள், வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்

பால்

பாலை நன்கு காய்ச்சி பருகுவது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை தரும். ஆனால், பச்சை பாலை பயன்படுத்தும் போது ஆரோக்கியத்தைப் பாதிக்கலாம். பச்சைப் பாலை பயன்படுத்துவதால் அதில் உள்ள நுண் கிருமிகள், சல்மோனெல்லா போன்றவை இருக்கலாம். இவை உடல் ஆரோக்கியத்தைப் பாதிக்கலாம்

ஆலிவ்

இன்று பலரும் விரும்பி உண்ணும் உணவு வகைகளில் ஒன்று ஆலிவ். இதன் புளிப்பு சுவை அனைவரையும் ஈர்க்கும். எனினும் இதை பதப்படுத்தாமல் அப்படியே உண்ணுவது உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கலாம்

முட்டை

சிலர் மஞ்சள் கருவை மட்டும் பச்சையாக எடுத்துக் கொள்வர். ஆனால், இது ஆரோக்கிய பிரச்சனைகளைக் கொடுக்கலாம். ஏனெனில், இதில் சல்மோனெல்லா அல்லது வேறு ஏதாவது பாக்டீரியா இருப்பின், இவை பல நோய்களை உண்டாக்கலாம்

காளான்

காளான் உடல் நலத்திற்கு ஆரோக்கியமானதாக இருப்பினும், காளானை பச்சையாக உண்ணும் போது பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தலாம். இது பூஞ்சை வகை என்பதால், இதில் நுண்கிருமிகள் அதிகமாக இருக்கலாம். இவற்றை சமைக்காமல் பச்சையாக உண்பது செரிமான கோளாறுகளை ஏற்படுத்தலாம்

ப்ரோக்கோலி

ப்ரோக்கோலியை பச்சையாக உண்பது செரிமான பிரச்சனைகளை உண்டாக்குகிறது. இதில் அதிகளவிலான சர்க்கரை சத்துக்கள் இருப்பதே இதற்குக் காரணம். இதை வேக வைத்து உண்ணும் போது சர்க்கரை அளவு குறைந்து செரிமானத்தை எளிதாக்குகிறது