உஷார்! இந்த உணவுகளை பச்சையாக மட்டும் சாப்பிட்ராதீங்க

By Gowthami Subramani
13 Jun 2025, 15:19 IST

அன்றாட உணவில் நாம் எடுத்துக் கொள்ளும் சில உணவுகள் உடலுக்கு ஆரோக்கியமானதாக இருப்பினும், அதை வேகவைக்காமல் பச்சையாக எடுத்துக் கொள்வது ஆரோக்கியத்தைப் பாதிக்கக் கூடியதாக இருக்கலாம். இதில் பச்சையாக சாப்பிடக் கூடாத உணவுகள் சிலவற்றைக் காணலாம்

பால்

பாலை நன்கு காய்ச்சி அருந்துவது உடலுக்குப் பல நன்மைகளைத் தருகிறது. ஆனால், காய்ச்சாத பச்சை பால் குடிப்பது உடல் ஆரோக்கியத்தைப் பாதிக்கலாம். ஏனெனில் பச்சைப் பாலைப் பயன்படுத்தும் போது, அதில் உள்ள நுண் கிருமிகள், சல்மோனெல்லா போன்றவை உடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்

முட்டை

சிலர் மஞ்சள் கருவை பச்சையாக எடுத்துக் கொள்ள விரும்புவர். ஆனால், இது உடலுக்குப் பிரச்சனைகளைத் தரலாம். ஏனெனில், இதில் சல்மோனெல்லா அல்லது வேறு ஏதாவது பாக்டீரியா இருக்க வாய்ப்புள்ளது. இவை நோய்களை உண்டாக்கலாம்

ஆலிவ்

ஆலிவ்வின் புளிப்பு சுவை காரணமாக இன்று பலரும் அதை விரும்பி எடுத்துக் கொள்கின்றனர். எனினும் இதை பதப்படுத்தாமல் அப்படியே உண்ணுவது உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கலாம்

ராஜ்மா

இதில் அதிகளவு புரதம் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளது. எனினும், இதை பச்சையாக எடுத்துக் கொள்வது குமட்டல், வாந்தி, செரிமான பிரச்சனைகள் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடும்

ப்ரோக்கோலி

இதை பச்சையாக சாப்பிடுவது செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும். இதற்கு இதில் அதிகளவிலான சர்க்கரை சத்துக்கள் இருப்பதே காரணமாகும். இதை வேகவைத்து உட்கொள்வது சர்க்கரை அளவைக் குறைத்து செரிமானத்தை எளிதாக்குகிறது

காளான்

இது உடல் நலத்திற்கு ஆரோக்கியமானதாக இருப்பினும், இதை பச்சையாக எடுத்துக் கொள்வது பல்வேறு உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். காளான் பூஞ்சை வகை என்பதால், அதில் நுண்கிருமிகள் காணப்படலாம். எனவே இதை சமைக்காமல் பச்சையாக உண்பது செரிமான கோளாறுகளை ஏற்படுத்தலாம்