மாறிவரும் வானிலையில் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் உணவுகள்

By Gowthami Subramani
05 Jun 2025, 20:06 IST

மாறிவரும் வானிலைக்கு ஏற்ப உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டியது அவசியமாகும். இதில் வானிலை மாற்றத்திற்கு ஏற்றவாறு நாம் சாப்பிட வேண்டிய ஆரோக்கியமான உணவுகள் சிலவற்றைக் காணலாம்

இஞ்சி

மாறும் வானிலையில், இஞ்சி செரிமானத்தை நன்றாக வைத்திருக்க உதவுகிறது. இது உடலுக்கு உள்ளிருந்து வெப்பத்தைத் தருகிறது. லேசான குளிர் காலை மற்றும் மதியம் பிரகாசமான வெயிலில், இஞ்சி ஒரு சிறந்த தீர்வாகும்

பூண்டு

பூண்டில் வைரஸ் எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் நிறைந்துள்ளது. இவை உடலை எந்த வகையான தொற்றுகளிலிருந்தும் பாதுகாக்க உதவுகிறது

மஞ்சள்

சிறிய பிரச்சினைகளையும் எளிதில் குணப்படுத்தும் இயற்கை பண்புகள் மஞ்சளில் நிறைந்துள்ளது. இது உடல் வலி, செரிமானம் மற்றும் மனநிலை சரியில்லாத தன்மை போன்றவற்றிற்கு மஞ்சள் சிறந்த தேர்வாக அமைகிறது

நெல்லிக்காய்

கோடையில் நாள்தோறும் நெல்லிக்காய் சாப்பிடுவது உடலுக்கு ஒரு சிறந்த மருந்து போன்றதாகும். இதில் உள்ள வைட்டமின் சி ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு மிகுந்த நன்மை பயக்கும்

கருப்பு மிளகு

இந்த சிறிய கருப்பு மிளகு ஏராளமான சக்தியைக் கொண்டுள்ளது. இது உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளை அதாவது மலச்சிக்கல் போன்றவற்றைக் குணப்படுத்த உதவுகிறது

எள்

எள் ஆனது அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுப்பொருளாகும். தினமும் ஒரு டீஸ்பூன் பச்சை எள் மூட்டு வலியைக் குணப்படுத்த உதவுகிறது. இதனுடன், தசை வலி, எலும்பு வளர்ச்சி போன்றவற்றிலும் எள் பயனுள்ளதாக இருக்கும்

தேங்காய் தண்ணீர்

தேங்காய் நீர் என்பது உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது. இது ஆற்றலை வழங்கக்கூடிய ஒரு இயற்கை எலக்ட்ரோலைட் ஆகும்