குளிர்காலத்தில் உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதன் மூலம் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வைப் பெறலாம். இதில் உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவும் உணவுகள் சிலவற்றைக் காணலாம்
இஞ்சி
இஞ்சி அதன் அழற்சி எதிர்ப்புப் பண்புகளால் பெயர் பெற்றதாகும். இது உடலில் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தவும், வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது. இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்த, செரிமான ஆரோக்கியம் மற்றும் இயற்கையான ஆற்றலை அளிக்க உதவுகிறது
கீரை
இதில் வைட்டமின் சி, ஈ மற்றும் பீட்டா கரோட்டின் போன்றவை நிறைந்துள்ளது. இதில் உள்ள பல்வேறு வைட்டமின்கள், தாதுக்கள் வலுவான நோயெதிர்ப்பு மண்டலத்தை பராமரிக்கிறது. இதன் இரும்புச்சத்துக்கள் இரத்த ஓட்டத்தை ஊக்குவித்து, சோர்வைக் குறைக்கிறது
பாதாம்
பாதாமில் நிறைந்துள்ள வைட்டமின் ஈ நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இது செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்கவும், நோய்த்தொற்றுக்களுக்கு எதிராக உடலைப் பாதுகாக்கவும் உதவுகிறது. கூடுதலாக, இதன் புரதம், நல்ல கொழுப்புகள் போன்றவை நீடித்த ஆற்றலைத் தருகிறது
மஞ்சள்
இதில் குர்குமின், சக்தி வாய்ந்த அழற்சி எதிர்ப்பு, ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உள்ளது. மேலும் நோய்களுக்கு எதிராக உடலின் பாதுகாப்பை வலுப்படுத்த குர்குமின் உதவுகிறது. இவை கல்லீரலின் நச்சுத்தன்மைக்கும், ஆற்றல் மேம்பாட்டிற்கும் உதவுகிறது
பூண்டு
இதன் ஆன்டிவைரல், பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இது நோய்த்தொற்றுக்களை எதிர்த்துப் போராடவும், நாள் முழுவதும் நீடித்த ஆற்றலை வழங்கவும் உதவுகிறது
பெர்ரி
பெர்ரி பழத்தில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், குறிப்பாக வைட்டமின் சி, ஃபிளாவனாய்டுகள் போன்றவை வீக்கத்தைக் குறைக்கவும், நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. இதன் நார்ச்சத்துக்கள் இரத்த சர்க்கரை அளவை சீராக வைக்க உதவுகிறது
கிரீன் டீ
இது அதன் ஆக்ஸிஜனேற்ற குணங்களுக்காக நன்கு அறியப்பட்டதாகும். இவை நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்த மற்றும் நோய்களைத் தடுக்க உதவுகிறது. இவை ஆற்றல் ஊக்கத்தை அளிக்கிறது