சில உணவுகளை வெறும் வயிற்றில் சாப்பிடவே கூடாது. அப்படி என்ன உணவுகள் அவை என்று இங்கே தெரிந்துக்கொள்வோம் வாருங்கள்.
வெறும் வயிற்றில் என்ன சாப்பிட வேண்டும்? எதை சாப்பிடக்கூடாது? என்பதை பொருட்படுத்தாமல் எதையாவது சாப்பிடுவார்கள். ஆனால் அப்படி சாப்பிட்டால் தேவையில்லாத நோய்கள் உண்டாகும்.
சில உணவுகள் நல்லது தான் என்றால், அவை வெறும் வயிற்றில் சாப்பிடும்போது, விஷமாக மாறலாம். வெறும் வயிற்றில் சாப்பிடவே கூடாத உணவுகள் என்னென்னவென்று இங்கே விரிவாக காண்போம்.
சிட்ரஸ் பழங்கள்
காலையில் எடுக்கும் உணவில் சிட்ரஸ் பழங்களைச் சேர்க்கக் கூடாது என்று கூறப்படுகிறது. குறிப்பாக புளிப்பு நிறைந்த பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சை, தக்காளி போன்றவற்றை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது என்று கூறப்படுகிறது. புளிப்புப் பழங்களில் அமிலம் இருப்பதால் அசிடிட்டி பிரச்னை வர வாய்ப்பு இருப்பதாகவும், வயிற்றுப்புண் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
பச்சைக் காய்கறிகள்
வெறும் வயிற்றில் பலர் பச்சைக் காய்கறிகளை சாப்பிடுவார்கள். அவை நல்லவை அல்ல. பச்சை காய்கறிகளில் நார்ச்சத்து மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளன. இவற்றை காலையில் சாப்பிட்டால் சரியாக ஜீரணமாகாது. மேலும் வயிற்று வலி ஏற்படும்.
காரமான உணவுகள்
பலருக்கு காரமான உணவுகளை உண்ணும் பழக்கம் இருக்கும். ஆனால் காரமான உணவுகளை உண்பதால் வயிற்றில் உணவு சீக்கிரம் செரிக்காது. செரிமான அமைப்பில் வீக்கத்தை உண்டாக்குகிறது. அதனால் தான் மசாலா மற்றும் மிளகாய் சேர்த்து சமைத்த காரமான உணவை எந்த சூழ்நிலையிலும் காலையில் சாப்பிடுவது நல்லதல்ல என்று கூறப்படுகிறது.
ஜூஸ்
காலையில் வெறும் வயிற்றில் ஜூஸ் குடிப்பதால் மலச்சிக்கல், அமிலத்தன்மை மற்றும் வயிற்று வலி போன்ற பிரச்னைகள் ஏற்படும். குறிப்பாக, வெறும் வயிற்றில் ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை சாறு எடுக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. ஜூஸ் குடிப்பதால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு வேகமாக அதிகரித்து, சோம்பல், சோர்வு போன்ற பிரச்னைகள் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.
காபி
பலர் காலையில் டீ மற்றும் காபி குடிப்பார்கள். காபியில் காஃபின் என்ற பொருள் உள்ளதாகவும், இது செரிமான அமைப்பை பாதித்து அமிலத்தன்மையை ஏற்படுத்துவதாகவும் கூறப்படுகிறது. இது வயிற்றுப்போக்குக்கு வழிவகுக்கும் என்று கூறப்படுகிறது.
வறுத்த உணவுகள்
எண்ணெயில் பொரித்த உணவுகளை பலர் விரும்புவார்கள். அவற்றை உண்பதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் இவற்றை வெறும் வயிற்றில் சாப்பிட்டால், அவை விரைவில் ஜீரணமாகாது. இதனால் வயிற்றில் வீக்கம் ஏற்படும் என்று கூறப்படுகிறது.
பதப்படுத்தப்பட்ட உணவுகள்
இப்போதெல்லாம் பெரும்பாலான மக்கள் பாக்கெட் உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிட விரும்புகிறார்கள். ஆனால் பதப்படுத்தப்பட்ட உணவுகளான துரித உணவு, சிப்ஸ் மற்றும் பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுகளில் சர்க்கரை, உப்பு மற்றும் ஆரோக்கியமற்ற கொழுப்புகள் அதிகம். இதனை வெறும் வயிற்றில் சாப்பிடவே கூடாது.
குறிப்பு
இங்கு உங்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து சுகாதார தகவல்களும் பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. ஆனால், இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது.