இரவில் நல்ல தூக்கம் வேணும்னா இந்த உணவெல்லாம் சாப்பிடாதீங்க

By Gowthami Subramani
17 Jan 2024, 22:35 IST

உடல் ஆரோக்கியத்திற்கு 8 முதல் 9 மணி நேரம் தூக்கம் மிகவும் அவசியமாகும். நல்ல தூக்கத்தின் மூலம் பல்வேறு நோய்களைத் தடுக்க உதவுகிறது. ஆனால், இரவில் சில உணவுகளை உட்கொள்வது தூக்கத்தைக் கெடுக்கும். இரவு நேரங்களில் சாப்பிடக் கூடாத உணவுகள் சிலவற்றைக் காணலாம்

நிபுணர் கருத்து

ஊட்டச்சத்து நிபுண வருண் கத்யால் அவர்களின் கூற்றுப்படி, “காஃபின், சாக்லேட், தேநீர் போன்றவை தூக்க முறையை மாற்றும். இந்த சூழ்நிலையில் தூங்கும் முன் இவற்றை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்”

காரமான உணவு

தூங்கும் முன் அதிக காரமான உணவுகளைத் தவிர்க்க வேண்டும். காரமான உணவு வயிற்று எரிச்சலை ஏற்படுத்துகிறது. இது தூங்குவதில் சிரமத்தை உண்டாக்கலாம்

மதுவைத் தவிர்த்தல்

இரவில் தூங்கும் முன் மது அருந்துவதைத் தவிர்க்கலாம். இரவு நேரங்களில் மது அருந்துவது அடிக்கடி சிறுநீர் கழிக்கும் சூழல் நேரிடலாம். எனவே இரவில் மது அருந்துவதைத் தவிர்ப்பது நல்லது

சாக்லேட்

இரவு நேரங்களில் சாக்லேட் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் சாக்லேட்டில் காஃபின் நிறைந்திருக்கும். இவை தூக்கத்தைக் கெடுக்கலாம்

இனிப்புகளைத் தவிர்ப்பது

அதிகளவு சர்க்கரை சாப்பிடுவது தூக்கமின்மை பிரச்சனையை ஏற்படுத்தலாம். இந்த சூழ்நிலையில் இனிப்பு சப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்

கிரீன் டீ

கிரீன் டீயில் காஃபின் நிறைந்துள்ளது. இது தூக்கத்தைத் தொந்தரவு செய்வதால் இரவு நேரத்தில் கிரீன் டீ அருந்துவதைத் தவிர்க்க வேண்டும். கிரீன் டீ குடிப்பது உடலில் புத்துணர்ச்சியைத் தருவதால் தூக்கத்தைக் கெடுக்கலாம்

நல்ல உறக்கத்தைப் பெற விரும்புபவர்கள் மேலே கூறப்பட்டவற்றை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்