சிவப்பு கொய்யாவுடன் இந்த 5 உணவுகளை தப்பித்தவறிக்கூட சாப்பிடக்கூடாது!

By Kanimozhi Pannerselvam
02 Feb 2024, 22:12 IST

சிவப்பு கொய்யா நன்மைகள் பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் கொய்யாப் பழத்தில் கா

சிவப்பு கொய்யா நன்மைகள் பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் கொய்யாப் பழத்தில் கால்சியம் சத்து, பொட்டாசியம் சத்து, நார்ச்சத்து, விட்டமின சி, வைட்டமின் ஏ உட்பட பல சத்துக்கள் உள்ளது. குறிப்பாக சிவப்புக் கொய்யாவே சிறந்தது என்றும் சொல்லப்படுகிறது. கொய்யா சாப்பிட்ட பிறகு நம்மில் சிலர் சில பொதுவான தவறுகளை செய்கிறோம். ஆனால், இந்த சிறிய தவறுகள் உங்கள் ஆரோக்கியத்தில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்.

தண்ணீர்

சிலர் கொய்யா பழத்தை சாப்பிட்டதும், தண்ணீர் குடிப்பார்கள். கொய்யா உடல் எடையை குறைக்க வேலை செய்கிறது. இருப்பினும், இந்த பழத்துடன் தண்ணீர் குடிப்பது எதிர் விளைவை ஏற்படுத்தும்.

பால்

சிவப்பு கொய்யா சாப்பிட்டவுடன் பால் குடிப்பது. உங்கள் செரிமான அமைப்பில் கடுமையான விளைவை ஏற்படுத்தும். அதுமட்டுமின்றி வயிறு தொடர்பான பிரச்சனைகளும் அதிகரிக்கும்.

வாழைப்பழம்

சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, கொய்யா மற்றும் வாழை பழங்களை ஒரே நேரத்தில் உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. கொய்யாப்பழம் சாப்பிடும் போது வாழைப்பழம் சாப்பிடக்கூடாது என்பது ஐதீகமாகவும் கடைபிடிக்கப்படுகிறது.

தயிர்

கொய்யாப் பழத்துடன் தயிர் சேர்த்து சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகள் வரலாம்.

மோர்

சிவப்பு கொய்யா சாப்பிட்ட பிறகு மோர் சாப்பிடுவதால் அசிடிட்டி பிரச்சனை ஏற்படுகிறது. இது வயிற்று வலியையும் ஏற்படுத்தும்.