இரவு நேரத்தில் நாம் சில உணவுகளை தவிர்க்க வேண்டும். இல்லையெனில் ஆரோக்கியம் பாதிக்கப்படும். அப்படி நீங்கள் எந்த உணவை தவிர்க்க வேண்டும் என்று இங்கே காண்போம்.
தயிர்
இரவில் தயிர் சாப்பிட்டால், செரிமான அமைப்பு பாதிக்கப்படும். ஆகையால் இரவு நேரங்களில் தயிர் சாப்பிடுவதை தடுக்க வேண்டும்.
தக்காளி
இரவில் தக்காளி சாப்பிட்டால் அசிடிட்டி பிரச்னை ஏற்படும். இதற்கு இதில் உள்ள அமிலத் தன்மை தான் காரணம்.
வெங்காயம்
இரவு நேரத்தில் வெங்காயம் சாப்பிட்டால் வாயு பிரச்னை ஏற்படும். இதனால் இரவு முழுவதும் ஏப்பம் விட்டுக் கொண்டே இருப்பீர்கள்.
ஐஸ்கிரீம்
இரவில் ஐஸ்கிரீம் சாப்பிடுவது மன அழுத்த ஹார்மோன்களை அதிகரிக்கிறது. இதனால் தூங்குவதற்குச் சிரமம் ஏற்படுகிறது.
மது அருந்துதல்
இரவில் மது அருந்துவது அதிக சிறுநீர் கழிக்கத் தூண்டும். இதனால் அடிக்கடி எழுந்துகொள்ள நேரிடும்.
பழங்கள்
ஆரஞ்சு, திராட்சை போன்ற பழங்களில் சிட்ரஸ் உள்ளது. இவற்றை இரவில் உட்கொள்வது நெஞ்செரிச்சலை அதிகரிக்கிறது.
காரமான உணவுகள்
உணவில் அதிகப்படியான காரம் தூங்கும் திறனைக் குறைக்கிறது. இரவில் காரம் அதிகமாக இருக்கும் உணவுகள் அதிகம் உட்கொள்ளும்போது, நெஞ்செரிச்சலை ஏற்படுத்துகிறது.
இனிப்பான உணவுகள்
அதிக சர்க்கரை உள்ள உணவு அல்லது தானியங்களை உட்கொள்வது ரத்தத்தின் சர்க்கரை அளவை அதிகரிக்கும் அல்லது குறைக்கும்.