காய்கறிகள் உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு நன்மைகளைத் தருகிறது. எனினும் சில காய்கறிகளை இரவில் தவறுதலாக உட்கொள்ளக் கூடாது. இது ஆரோக்கியத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம்
ப்ரோக்கோலி
ப்ரோக்கோலியில் டிரிப்டோபான் என்ற கலவை நிறைந்துள்ளது. இது தூக்கத்தைக் கெடுக்கலாம். இதில் அதிக நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த சூழ்நிலையில் உடல் அதை விரைவாக செரிமானம் செய்ய இயலாது
சர்க்கரை வள்ளிக்கிழங்கு
சர்க்கரை வள்ளிக்கிழங்கு உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. எனினும், இரவில் இதைச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். இந்த கிழங்கில் அதிக நார்ச்சத்துக்கள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்துள்ளது. இது வீக்கம் மற்றும் வாயு பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்
வெங்காயம்
வெங்காயம் மிகுந்த ஊட்டச்சத்து கொண்ட ஆரோக்கியம் மிக்க உணவுப்பொருள் ஆகும். எனினும், இதை இரவில் உட்கொள்வது உடலுக்கு தீங்கு விளைவிக்கலாம். வெங்காயத்தில் பிரக்டான்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் காணப்படுவதால் வீக்கம் மற்றும் தூக்கம் தொடர்பான பிரச்சனைகளை அதிகரிக்கலாம்
பூண்டு
பூண்டு வாயுமிக்கது என்பதால் இதை இரவில் உட்கொள்வது வாயு, வீக்கம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்
பட்டாணி
பட்டாணியில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு மிகவும் நன்மை தரும். பட்டாணியில் அதிக நார்ச்சத்துக்கள் மற்றும் பிரக்டோஸ் நிறைந்துள்ளது. இது வயிற்றில் வீக்கம், வாயு ஏற்படலாம். மேலும் செரிமான அமைப்பில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தலாம்
தக்காளி
தக்காளி அமிலத்தன்மை கொண்டதாகும். இதனை இரவில் எடுத்துக் கொள்வது வயிறு தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். இது தவிர அமினோ அமிலங்களும் நிறைந்துள்ளன. இவை மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கலாம். இதனால் தூக்க பிரச்சனையை உண்டாக்கலாம்
இந்த காய்கறிகளை இரவு நேரங்களில் உட்கொள்வது உடல் நலப் பிரச்சனைகளை ஏற்படுத்துவதுடன், தூக்கம் தொடர்பான பிரச்சனைகளையும் உண்டாக்கலாம். எனவே இந்த காய்கறிகளை இரவில் எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும்