நல்ல மனநிலையை மேம்படுத்த உடலில் டோபமைன், செரோடோனின் போன்ற ஹார்மோன்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது. இதற்கு சில ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வது அவசியமாகும். இதில் நல்ல ஹார்மோன் ஆன டோபமைனை அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகளைக் காணலாம்
பெர்ரி
அவுரிநெல்லிகள், ஸ்ட்ராபெர்ரி போன்ற பெர்ரி பழங்களில் அதிகளவு ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளது. இவை வீக்கத்தைக் குறைக்கவும், மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகின்றன
ஓட்ஸ்
ஓட்ஸ் சாப்பிடுவது இரத்த சர்க்கரையை சீராக வைக்க உதவுவதுடன், மனநிலையை சீராக வைத்திருக்க உதவும் மெதுவாக வெளியிடும் ஆற்றல் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்த சிறந்த மூலமாகும்
புளித்த உணவுகள்
தயிர், கேஃபிர் மற்றும் கிம்ச்சி போன்ற புரோபயாடிக் நிறைந்த உணவுகள் குடல் ஆரோக்கியத்தை ஆதரிக்க உதவுகிறது. இது மனநிலை மற்றும் மன நலனுடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது
நட்ஸ் மற்றும் விதைகள்
பாதாம் போன்ற நட்ஸ்களும், சூரியகாந்தி விதைகள் மற்றும் பூசணி விதைகள் போன்ற விதைகளும் மக்னீசியம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்ததாகும். இவை பதட்டத்தைக் குறைத்து நல்ல மனநிலையை மேம்படுத்த உதவுகிறது
டார்க் சாக்லேட்
டார்க் சாக்லேட்டில் செரோடோனின் அளவை அதிகரிக்கும் சேர்மங்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளன. இவை செரோடோனின் போன்ற மகிழ்ச்சியான ஹார்மோனை மேம்படுத்துவதன் மூலம் மூளையை மகிழ்ச்சியடையச் செய்கிறது