உடலில் ஹீமோகுளோபினை அதிகரிக்க அன்றாட உணவில் சில உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். இதில் இயற்கையாகவே உடலில் ஹீமோகுளோபினை அதிகரிக்க உதவும் உணவுகளைக் காணலாம்
ஆப்பிள்
இது இரும்புச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்ததாகும். இவை உடலில் ஹீமோகுளோபினை அதிகரிக்க உதவுகிறது. எனவே தினந்தோறும் ஆப்பிள் உட்கொள்வதன் மூலம் ஹீமோகுளோபினை அதிகரிக்கலாம்
பேரீச்சம்பழம்
இது இரும்புச்சத்து நிறைந்த பழமாகும். இந்த பழத்தை உட்கொள்வது ஹீமோகுளோபினை அதிகரிக்கிறது. இதை உலர்த்தி சாப்பிடலாம் அல்லது பாலில் கொதிக்க வைத்து எடுத்துக் கொள்ளலாம்
பீட்ரூட்
பீட்ரூட் இரும்புச்சத்து நிறைந்த காய்கறியாகும். இந்த சாறு அருந்துவது உடலில் உள்ள இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம். எனவே உடலில் ஹீமோகுளோபினை அதிகரிக்க பீட்ரூட்டை எடுத்துக் கொள்ளலாம்
டார்க் சாக்லேட்
டார்க் சாக்லேட்டில் ஃபிளவனாய்டுகள் மற்றும் இரும்புச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இது ஹீமோகுளோபின் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஹீமோகுளோபினை அதிகரிக்க ஒரு சிறிய துண்டு டார்க் சாக்லேட்டை எடுத்துக் கொள்ளலாம்
நட்ஸ் மற்றும் விதைகள்
பாதாம், வால்நட்ஸ் மற்றும் சூரியகாந்தி விதைகளில் இரும்புச்சத்துக்கள் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. எனவே ஹீமோகுளோபினை அதிகரிக்க இதை ஸ்மூத்திகளில் சேர்க்கலாம்
பருப்பு வகைகள்
உளுத்தம்பருப்பு, மசூர் பருப்பு, பாசிப்பயறு போன்ற அனைத்து பருப்பு வகைகளிலும் புரதம், இரும்புச்சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் இது உடலுக்கு வலிமை தரும் வகையில் செயல்படுகிறது. இதை சூப் செய்து அருந்தலாம்
பூசணி விதைகள்
இந்த சிறிய விதையில் இரும்புச்சத்து, துத்தநாகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இதை சாலட் வடிவிலோ அல்லது வறுத்து ஸ்மூத்தியாகவோ எடுத்துக் கொள்ளலாம்
மாதுளை
இது வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து நிறைந்ததாகும். தினமும் மாதுளை சாறு அருந்துவது உடலில் ஹீமோகுளோபினை அதிகரிக்க உதவுகிறது
கீரை
பசலைக் கீரை இரும்புச்சத்துக்கள் நிறைந்ததாகும். இதை ஸ்மூத்தியாகவோ அல்லது டிடாக்ஸ் பானமாக எடுத்துக் கொள்ளலாம்