நீங்க தவிர்க்க வேண்டிய வயதை வேகமாக அதிகரிக்கக் கூடிய உணவுகள்

By Gowthami Subramani
10 Sep 2024, 08:36 IST

முதுமை என்பது ஒரு இயற்கையான செயலாக இருப்பினும், சில உணவுகள் முதுமையை விரைவுபடுத்துகிறது. இது வயதானவராக உணரச் செய்யலாம். இதில் முதுமையை விரைவுபடுத்தும் உணவுகளைக் காணலாம்

காபி

காலையில் எழுந்ததும் அனைவரும் குடிக்கக் கூடிய காபி சிறுநீர் கழிப்பதை அதிகரிப்பதன் மூலம் சருமத்திற்கு நீரிழப்பை ஏற்படச் செய்கிறது. குறைந்த நீர்ச்சத்து காரணமாக சருமம் நாம் எதிர்பார்ப்பதை விட விரைவில் சுருக்கமாகவும், மந்தமாகவும் தோற்றமளிக்கலாம்

சர்க்கரை உணவுகள்

சர்க்கரை உணவுகள் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்யலாம். இது கிளைகேஷன் எனப்படும் செயல்முறைக்கு வழிவகுப்பதுடன், சருமத்தில் உள்ள கொலாஜன் மற்றும் எலாஸ்டினை சேதப்படுத்தி முன்கூட்டிய சுருக்கங்களுக்கு வழிவகுக்கிறது

உப்பு உணவுகள்

அதிக உப்பை உட்கொள்வது உடலில் தண்ணீரைத் தக்கவைத்து, வீக்கத்தை ஏற்படுத்தலாம். நீண்ட காலத்திற்கு உப்பை அதிகம் உட்கொள்வதால் உயர் இரத்த அழுத்தம் ஏற்படலாம். இது இதய ஆரோக்கியத்தைப் பாதிக்கிறது

பால் பொருட்கள்

சிலருக்கு பால் பொருள்கள் உட்கொள்வது முகப்பரு போன்ற தோல் பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். இது வடுக்கள் மற்றும் புள்ளிகளை ஏற்படுத்துகிறது. இது சருமத்தை வயதானதாக மாற்றும். மேலும் உடலில் வீக்கத்தை அதிகரிக்கலாம்

காரமான உணவுகள்

இந்த வகை உணவுகள் ரோசாசியா போன்ற தோல் நிலைகளைத் தூண்டுகிறது. குறிப்பாக, உணர்திறன் வாய்ந்த சருமம் கொண்டிருப்பவர்களுக்கு இது காலப்போக்கில், சருமத்தை பழையதாகவும், தேய்மானமாகவும் மாற்றலாம்

வறுத்த உணவுகள்

இது சுவையானதாக இருப்பினும், இவை டிரான்ஸ் கொழுப்புகளால் ஏற்றப்படுகின்றன. இந்த கொழுப்புகள் சருமத்தின் கொலாஜனை சேதப்படுத்தி, சுருக்கங்கள் ஏற்பட வழிவகுக்கிறது