ஒற்றைத் தலைவலி என்பது தலையில் அதீத வலியை உண்டாக்கும் ஒரு நரம்பியல் நோய்க்குறியாகும். இது குமட்டல், வாந்தி உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். ஒற்றைத் தலைவலியை தூண்டும் உணவு பொருட்கள் பற்றி இங்கே பார்க்கலாம்.
சாக்லேட்
சாக்லேட்டில் உள்ள காஃபின் மற்றும் செயற்கை சர்க்கரை உள்ளடக்கம் ஒற்றைத் தலைவலியை ஏற்படுத்தும். ஆய்வுகளின் படி, ஒற்றைத் தலைவலி பிரச்சனை உள்ளவர்களில் 22% பேர் சாக்லேட் பிரியர்களாக உள்ளனர்.
காஃபின்
காஃபி மற்றும் டீயில் உள்ள காஃபின் உள்ளடக்கம் ஒற்றை தலைவலியை ஏற்படுத்தும். அந்த வகையில் நாள் ஒன்றுக்கு 200 மிகி அளவுக்கு மேலாக காஃபின் எடுத்துக்கொள்ளும் நபர்களுக்கு ஒற்றைத் தலைவலி ஏற்படும்.
ரெட் ஒயின்
ரெட் ஒயினில் டைரமைன் மற்றும் ஹிஸ்டமைன் போன்ற இரசாயனங்கள் காணப்படுகின்றன. இவை, தீராத ஒற்றை தலைவலி பிரச்சனைக்கு காரணமாகிறது.
சீஸ்
கொழுப்பு மற்றும் அமிலச் சேர்மங்கள் கொண்ட சீஸ் சாப்பிடுவது தலை பாரம் மற்றும் ஒற்றை தலைவலி பிரச்சனையை ஏற்படுத்தும். குறிப்பாக, பல இரவுகளை தாண்டிய பழைய சீஸ்களை சாப்பிடுகையில்.
சிட்ரஸ் பழங்கள்
ஆரஞ்சு, எலுமிச்சை, பம்பளிமாஸ் உள்ளிட்ட சிட்ரஸ் பழங்களை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதும் ஒற்றை தலைவலி பிரச்சனைக்கு காரணமாகிறது. இவற்றின் அமிலத் தன்மை இதற்கு காரணமாகிறது.
ஈஸ்ட் கலந்த உணவுகள்
பிரட், பன் என பேக் செய்யப்படும் பொருட்கள் அனைத்திலும் ஈஸ்ட் கலக்கப்படுகிறது. ஈஸ்ட் கலந்த இந்த உணவுகளில் காணப்படும் டைரமைன், ஒற்றை தலைவலி பிரச்சனைக்கு காரணமாகிறது.
பேரிட்சை & அத்திப்பழம்
பேரிட்டை பழம், அத்திப்பழம், உலர் திராட்சை என உலர் பழங்களை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்வதும் இந்த ஒற்றை தலைவலி பிரச்சனைக்கு வழிவகுக்கும்.