குளிர்காலத்தில் வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும், உடல் எடை மேலாண்மைக்கும் சில ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். குளிர்காலத்தில் மெட்டபாலிசத்தை அதிகரிக்க உதவும் உணவுகளைக் காணலாம்
இஞ்சி
இஞ்சி அதன் தெர்மோஜெனிக் பண்புகளுக்காக பெயர் பெற்றதாகும். இது உடலில் கலோரிகளை எரிக்க உதவுகிறது. மேலும் செரிமானத்தை மேம்படுத்துகிறது. இதற்கு இஞ்சி டீ அல்லது சூப்களில் இஞ்சி சேர்த்து அருந்தலாம். இது உடலை சூடாக வைக்க உதவுகிறது
இலவங்கப்பட்டை
இது இரத்த சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்தவும், வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. இது குளிர்கால பானங்கள் மற்றும் இனிப்புகளுக்கு ஒரு சூடான சுவையைத் தருவதாக அமைகிறது
ஓட்ஸ்
இது நார்ச்சத்துக்கள் நிறைந்த முழு தானியமாகும். இது நீண்ட நேரம் முழுமையாக வைத்திருக்கவும், இரத்த சர்க்கரையை நிலைநிறுத்தவும் உதவுகிறது. இவை வளர்ச்சிதை மாற்றத்திற்கு உதவுகிறது
நட்ஸ் மற்றும் விதைகள்
பாதாம், அக்ரூட் பருப்புகள் மற்றும் ஆளிவிதைகள் ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் புரதங்களால் நிறைந்ததாகும். இதன் மூலம் நீடித்த ஆற்றலைப் பெறலாம் மற்றும் வளர்சிதை மாற்ற ஆரோக்கியத்திற்கு உதவுகிறது
சிட்ரஸ் பழங்கள்
ஆரஞ்சு, எலுமிச்சை மற்றும் திராட்சைப்பழங்களில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது உடற்பயிற்சியின் போது கொழுப்பு ஆக்ஸிஜனேற்றத்தை அதிகரிக்கிறது
கிரீன் டீ
இதில் உள்ள கேட்டசின்கள், காஃபின் போன்றவை கொழுப்பு ஆக்சிஜனேற்றம் மற்றும் தெர்மோஜெனீசிஸை அதிகரிப்பதன் மூலம் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது
புரதம் நிறைந்த உணவுகள்
முட்டைகள், மெலிந்த இறைச்சிகள் மற்றும் பருப்பு வகைகள் செரிமானத்திற்கு அதிக ஆற்றல் தேவைப்படுகிறது. இது வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும், தசை வெகுஜனத்தை பராமரிக்கிறது