மன அரோக்கியத்திற்கான உணவுகள் இங்கே..

By Ishvarya Gurumurthy G
30 Oct 2024, 08:25 IST

ஆரோக்கியமான மனநிலையை பெற விரும்புபவர்கள் சில ஆரோக்கியமான உணவு முறையைக் கையாள வேண்டும். அந்த உணவுகள் இங்கே.

பருப்பு மற்றும் தானிய வகைகள்

பாசிப்பருப்பு, துவரம் பருப்பு, தட்டைப் பயிறு, கொள்ளு போன்ற பருப்பு வகைகள் புரதத்தின் வளமான மூலமாகும். டிரிப்டோபான் நரம்பியல் கடத்திகளை உருவாக்க உதவுகிறது. மேலும் சோயாபீன்ஸ், கிட்னி பீன்ஸ் மற்றும் கொண்டைக்கடலை போன்றவை டிரிப்டோபனின் சிறந்த மூலமாகும்.

புதிய பழங்கள்

பிளாக்பெர்ரிகள், ஸ்ட்ராபெர்ரி போன்ற பெர்ரி பழங்கள், அவுரி நெல்லிகள், சிட்ரஸ் பழ வகைகளான எலுமிச்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி போன்றவை அதிகளவு வைட்டமின் சி மற்றும் ஆக்ஸிஜனேற்றங்களைக் கொண்டுள்ளது. இவை முதுமை தொடர்பான நினைவாற்றல் இழப்பு மற்றும் இன்னும் பிற மனநலப் பிரச்சனைகளைத் தவிர்க்க உதவுகிறது.

கீரைகள், காய்கறிகள் மற்றும் இலைகள்

தண்டுக்கீரை, பசலைக் கீரை, புதினா இலைகள், கறிவேப்பிலை, பாசி இலைகள் மற்றும் வெந்தய இலைகள் போன்றவற்றில் ஜியாக்சாண்டின், வைட்டமின் கே, ஃபோலேட், பீட்டா கரோட்டீன், லுடீன், செலினியம், துத்தநாகம் போன்ற மூளைக்கு ஆரோக்கியத்தைத் தரும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. எனவே இதனை உட்கொள்வது அறிவாற்றல் குறைவைத் தடுக்க உதவுகிறது.

கொழுப்பு நிறைந்த மீன்

கானாங்கெளுத்தி, சால்மன், டுனா மற்றும் மத்தி மீன்களில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் ஏராளமாக நிறைந்துள்ளது. இவை இரத்தத்தில் உள்ள பீட்டா- அமிலாய்டு அளவுகளைக் குறைத்து நன்மை தரக்கூடிய நிறைவுறா கொழுப்புகளாக மாறுகிறது.

நட்ஸ் மற்றும் விதைகள்

நட்ஸ் வகைகளில் அதிக புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளது. மேலும் இது நினைவாற்றலை மேம்படுத்த உதவுகிறது. பாதாம், வால்நட் போன்றவை அறிவாற்றல் செயல்திறனை மேம்படுத்துவதுடன், இதய நோய், மனச்சோர்வு மற்றும் டைப் 2 நீரிழிவு நோய் போன்றவற்றைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

தேநீர் மற்றும் காபி

தேநீர், காபி போன்றவற்றை அருந்துவது மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தவும், வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் உதவுகிறது. எனினும், இதை அளவாக உட்கொள்வது மனநிலையை மேம்படுத்துவதுடன், புத்துணர்ச்சியைத் தருகிறது. மேலும் காஃபின் உட்கொள்வது பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.

டார்க் சாக்லேட்

மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் டார்க் சாக்லேட் பெரிதும் உதவுகிறது. இதற்கு டார்க் சாக்லேட் கோகோவைக் கொண்டிருப்பதே காரணமாகும். இது மூளை செயல்பாட்டில் பெரும்பங்கு வகிக்கிறது.

இந்த உணவுகள் அனைத்தும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகளாகும். எனினும், சர்க்கரை நோய் அல்லது வேறு ஏதேனும் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த உணவுகளை எடுத்துக் கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.