ப்ரெய்ன் பவர் அதிகரிக்க இந்த உணவுகளை சாப்பிடுங்க

By Gowthami Subramani
02 Feb 2025, 20:06 IST

மூளை ஆரோக்கியத்தை அதிகரிக்கவும், மூளைத்திறனை மேம்படுத்தவும் சில வகையான உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். இதில் மூளை வளர்ச்சிக்கு சாப்பிட வேண்டிய உணவுகளைக் காணலாம்

மஞ்சள்

மஞ்சளில் குர்குமின் நிறைந்து காணப்படுகிறது. இது வீக்கத்தைக் குறைத்து புதிய மூளை செல்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது

டார்க் சாக்லேட்

இதில் மக்னீசியம் ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இது மனநிலையை மேம்படுத்தவும், நினைவாற்றலை ஊக்குவிக்கவும் உதவுகிறது

பூசணி விதைகள்

பூசணி விதைகளில் இரும்பு, தாமிரம் மற்றும் துத்தநாகம் போன்றவற்றைக் கொண்டுள்ளது. இது மூளையின் செயல்பாட்டிற்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது

உலர் பழங்கள்

உலர் பழங்களில் பாதாம், வேர்க்கடலை, வால்நட்ஸ் போன்ற நட்ஸ் வகைகளில் புரதம் மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளது. இது மூளை ஆற்றலை மேம்படுத்துகிறது

முட்டைகள்

முட்டையில் புரதம் மற்றும் கோலின் உள்ளது. இது மூளையை வலுப்படுத்த உதவுவதுடன், நினைவாற்றலை கூர்மைப்படுத்தவும் உதவுகிறது

கிரீன் டீ

இதில் அலன்டைன் என்ற அமினோ அமிலம் நிறைந்துள்ளது. இது கவனம் மற்றும் விழிப்புணர்வை மேம்படுத்தி தளர்வை ஊக்குவிக்கிறது

முழு தானியங்கள்

பழுப்பு அரிசி, ஓட்ஸ், பார்லி மற்றும் குயினோவா போன்ற முழு தானியங்களில் வைட்டமின் பி, மெக்னீசியம் மற்றும் துத்தநாகம் நிறைந்துள்ளது. இது மூளைக்கு ஆற்றலை வழங்குகிறது