மைக்ரோவேவில் தப்பித்தவறிக்கூட இந்த 5 பொருட்களை வைக்காதீங்க!
By Kanimozhi Pannerselvam
01 Feb 2024, 10:52 IST
பிளாஸ்டிக் கன்டெய்னர்
மைக்ரோவேவில் பயன்படுத்த பாதுகாப்பானது என்ற அறிவிப்பு இல்லாத பிளாஸ்டிக் கன்டெய்னர்களைப் பயன்படுத்துவதைத் தவிர்கக வேண்டும். ஏனெனில் சாதாரண பிளாஸ்டிக் கன்டெய்னர்களை மைக்ரோவேவ்வில் வைத்து சூடாகும்போது உணவில் நச்சு இரசாயனங்கள் கலக்கக்கூடும்.
மெட்டல் பாத்திரங்கள்
மெட்டல் பாத்திரங்கள் மின்காந்த அலைகளை பிரதிபலிக்கக்கூடியது, இது தீப்பொறிகள், தீ மற்றும் நுண்ணலையின் மேக்னட்ரானுக்கு செயல்பட்டு எதிர்வினைகளை உருவாக்ககூடும்.
திராட்சை மின்னோட்டத்தை உருவாக்ககூடியது, இதனை மைக்ரோவேவில் வைக்கும் போது அதிலிருந்து வெளியாகும் மின்காந்த அலைகள் தீயை உருவாக்கக்கூடும்.
ஓட்டுடன் முட்டை
மைக்ரோவேவில் ஓட்டுடன் முட்டையை சூடாக்கினால் உள்ளே நீராவி உருவாகி, வெடிப்புகளுக்கு வழிவகுக்கும்.
அலுமினியம் ஃபாயில்
அலுமினியத் தகடு வெப்பத்தை உறிஞ்சாது, ஆனால் அதை பிரதிபலிக்கிறது. இது தீப்பொறிகளை ஏற்படுத்தும், நுண்ணலை சேதப்படுத்தும் மற்றும் தீ அச்சுறுத்தலை ஏற்படுத்தும்.