கோடை நோய்களில் இருந்து தப்பிக்க இந்த 5 உணவுகளை கட்டாயம் சாப்பிடுங்க!

By Kanimozhi Pannerselvam
01 Mar 2024, 13:30 IST

மீன்

மீனில் ஒமேகா கொழுப்பு 3 நிறைந்துள்ளது. இதில் உள்ள சத்துக்கள் சருமத்திற்கும் கூந்தலுக்கும் நல்லது. சால்மன், கானாங்கெளுத்தி, மத்தி போன்றவற்றை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

அவகேடோ

அவகேடோவில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் சி, ஈ மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. அவகேடோ சருமத்தை வறட்சியில் இருந்தும் பாதுகாக்கிறது.

நட்ஸ்

வைட்டமின் ஈ, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் கொழுப்பு அமிலங்களும் உள்ளன. தினமும் உங்கள் உணவில் சில அக்ரூட் பருப்புகள் அல்லது சூரியகாந்தி விதைகளை சேர்த்துக் கொள்வது நல்லது.

கீரை

கீரையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இது முடி மற்றும் சருமத்திற்கும் நல்லது.

சர்க்கரை வள்ளி கிழங்கு

சர்க்கரை வள்ளி கிழங்கில், பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது. அவை வேகவைத்தோ அல்லது வறுத்தோ உண்ணப்படுகின்றன. உருளைக்கிழங்கு உடலுக்கு உடனடி ஆற்றலை வழங்குகிறது.