கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்க சில ஆரோக்கியமான உணவுகள் உங்களுக்கு உதவலாம். அந்த உணவுகள் என்னவென்று இங்கே காண்போம்.
கண் பார்வைக்கான ஊட்டச்சத்துக்கள்
கண் பார்வைக்கான முக்கிய ஊட்டச்சத்துக்களில் வைட்டமின் ஈ மற்றும் சி, துத்தநாகம், லுடீன், பீட்டா கரோட்டீன், ஜியாக்சாண்டின், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் போன்றவை அடங்கும். இது கண்புரை பிரச்சனையைத் தவிர்க்க உதவுகிறது. இதில் கண் பார்வையை மேம்படுத்த உதவும் சில ஆரோக்கியமிக்க ஊட்டச்சத்துக்கள் சிலவற்றைக் காணலாம்.
கேரட்
இந்த வேர் காய்கறிகளில் அதிக பீட்டா கரோட்டீன் நிறைந்துள்ளது. இது வைட்டமின் ஏ சத்துக்களைக் கொண்டுள்ளது. நல்ல பார்வை பராமரிப்பை மேற்கொள்ள வைட்டமின் ஏ சிறந்த தேர்வாகும். குறிப்பாக குறைந்த வெளிச்சம் மற்றும் இரவு பார்வைக்கு கேரட் உதவுகிறது. இது வெவ்வேறு ஒளி நிலைகளுக்கு கண்களைச் சரி செய்ய உதவுவதுடன், விழித்திரையின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.
கொழுப்பு நிறைந்த மீன்
கானாங்கெளுத்தி, மத்தி மற்றும் சால்மன் போன்றவற்றில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளது, குறிப்பாக EPA மற்றும் DHA நிறைந்துள்ளது. இந்த அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் கண்களில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது, உணவில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களை சேர்ப்பது விழித்திரையின் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது.
முழு தானியங்கள்
குயினோவா, பழுப்பு அரிசி மற்றும் முழு கோதுமை போன்றவற்றில் துத்தநாகம் சத்துக்கள் நிறைந்துள்ளது. இது விழித்திரையின் செயல்பாட்டிற்கு உதவுகிறது. இது விழித்திரையில் மெலனின் என்ற நிறமி உருவாகக் காரணமாக அமைகிறது. இது கண்களைப் பாதுகாப்பாக வைப்பதுடன், கண்புரை முன்னேற்றத்தைத் தாமதப்படுத்த உதவுகிறது.
நட்ஸ்
ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திலிருந்து கண்களைப் பாதுகாக்க உதவும் சிறந்த ஆக்ஸிஜனேற்றியாக வைட்டமின் ஈ சத்துக்கள் நிறைந்துள்ளது. இது கண்ணின் லென்ஸின் ஆரோக்கியத்தை ஆதரிக்கியது. மேலும், இது புரஊதாக் கதிர்வீச்சினால் ஏற்படும் பாதிப்பைக் குறியத்து கண்புரை அபாயத்தைக் குறைக்க வைட்டமின் ஈ உதவுகிறது. இதற்கு பாதாம், சூரியகாந்தி விதைகள் போன்றவற்றை சாப்பிடலாம்.
சிட்ரஸ் பழங்கள்
கண்களில் உள்ள இரத்த நாளங்களின் ஆரோக்கியத்திற்கு வைட்டமின் சி நல்ல மூலமாகும். இது லென்ஸின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதுடன், கண்புரை அபாயத்தைக் குறைக்கிறது. இதற்கு, எலுமிச்சை, திராட்சைப்பழங்கள் மற்றும் ஆரஞ்சு போன்ற வைட்டமின் சி ஆதாரங்களை எடுத்துக் கொள்ளலாம். இது ஃப்ரீ ரேடிக்கல் மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தால் ஏற்படும் சேதத்திலிருந்து கண்களைப் பாதுகாக்கிறது.
இந்த வகை உணவுகள் கண்களில் ஏற்படும் கண்புரை பிரச்சனையைத் தவிர்த்து கண் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவுகிறது.