வெறும் வயிற்றில் காஃபி சாப்பிடுவது இவ்வளவு ஆபத்தா?

By Devaki Jeganathan
15 Dec 2024, 21:26 IST

பலரின் காலை தொடங்குவது டீ , காபி உடன் தான். காலையில் வெறும் வயிற்றில் காபி குடித்தால் உடலுக்கு என்னென்ன தீமைகள் ஏற்படும் என்பதை பற்றி இங்கே பார்க்கலாம்.

ஹார்மோன் சமநிலையின்மை

வெறும் வயிற்றில் காபி குடிப்பதால் பல பிரச்சனைகள் ஏற்படுத்தும். அதிகாலையில் உட்கொள்வது ஹார்மோன் சமநிலையின்மையை ஏற்படுத்தும். இது மன அழுத்தத்தை அதிகரிக்கும்.

இரத்த சர்க்கரை அளவு

இதனை உட்கொள்வதால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்பாடில்லாமல் போகும். எனவே காலையில் காபி சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

மனநிலை பிரச்சனை

காலையில் இதை உட்கொள்வது மனநிலை மாற்றத்தை ஏற்படுத்தும். காபி குடிப்பதால் கார்டிசோல் ஹார்மோனின் அளவு அதிகரிக்கிறது. இதனால் மனநிலை மாற்ற பிரச்சனை ஏற்படும்.

நோய் எதிர்ப்பு சக்தி

இதை அதிகாலையில் உட்கொள்வதால் சோர்வு போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இதோடு தோல் பிரச்சனைகள் மற்றும் ஆட்டோ இம்யூன் நோய்கள் ஏற்படத் தொடங்கும்.

செரிமான பிரச்சனைகள்

இதை காலையில் உட்கொள்வது செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். இதில் அமிலத்தன்மை, வாயு போன்ற பிரச்சனைகள் அடங்கும்.

தூக்க பிரச்சனைகள்

மாலையில் இதை உட்கொள்வது தூக்க கோளாறுகளை ஏற்படுத்தும். இதில் உள்ள காஃபின் மூளையைத் தூண்டி, தூக்கத்தை நீக்குகிறது.