சாப்பிட்ட உடனே நீங்கள் அதிகமாக ஸ்வீட் சாப்பிடுகிறீர்கள் என்றால், உடனே நிறுத்துங்க. இதில் அதிக ஆபத்து இருக்கு. சாப்பிட்ட பிறகு சர்க்கரை சாப்பிடுவதன் தீமைகள் இங்கே.
டைப் 2 நீரிழிவு அபாயம்
சாப்பாடு சாப்பிட்ட பிறகு சர்க்கரை சாப்பிடுவதால், இன்சுலின் அதிகாம சுரக்கும். இது டைப் 2 நீரிழிவு நோயின் அபாயத்தை அதிகரிக்கும்.
சுகர் அதிகரிக்கும்
சாப்பாட்டுக்கு பிறகு அதிகமாக ஸ்வீட் சாப்பிடுவது, உடலில் சர்க்கரை அளவை அதிகரிக்கும். மேலும் இது சோர்வை அதிகரிக்கும்.
கொலஸ்ட்ரால் அதிகரிக்கும்
உணவுக்கு பிறகு ஸ்வீட் சாப்பிடுவது, அதில் உள்ள சர்க்கரையை உடலில் கொழுப்பாக சேமிக்கிறது. இதனால் கொல்ஸ்ட்ரால் பிரச்னை ஏற்படுகிறது. மேலும் இது உடல் பருமன் மற்றும் இதய நோய் ஆபத்தை அதிகரிக்கிறது.
செரிமானம் கெடும்
சாப்பிட்ட உடனே அதிகபடியான சர்க்கரை சாப்பிடுவது செரிமானத்தை கெடுக்கும். ஏனெனில் இது ஊட்டச்சத்து உறிஞ்சுதலை தடுக்கிறது. இதல் குடல் இயக்கம் கெடும்.
உடல் வீக்கம்
உணவுக்கு பிறகு ஸ்வீட் சாப்பிடுவது, உடலில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது. மேலும் இது பக்கவாதம், சரும பிரச்னை மற்றும் இதய நோயை ஏற்படுத்தும்.
வாய்வழி பிரச்னைகள்
சாப்பிட்ட உடல் இனிப்பு சாப்பிடுவது, வாயில் ஆபத்தான பாக்டீரியாவின் வளர்சியை அதிகரிக்கும். இது பற்கள் மற்றும் ஈறு பிரச்னையை அதிகரிக்கும்.
தூக்கம் கெடும்
நீங்கள் இரவு உணவுக்கு பின் இனிப்புகள் சாப்பிடுகிறீர்கள் என்றால், அது உங்கள் தூக்கத்தின் தரத்தை குறைக்கும். இது உங்களை நீண்ட நேரம் விழித்திருக்க செய்யும்.