சில காய்கறிகளை கொதிக்க வைக்கும் போது அதில் காணப்படக்கூடிய கடினமான செல்கள் உடைந்து, உடல் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதை எளிதாக்குகிறது
ப்ரோக்கோலி
ப்ரோக்கோலியை வேகவைத்து சாப்பிடுவது செரிமானம் அடைய எளிதாக்குகிறது. மேலும், இதில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் பாதுகாக்கப்படுகிறது
கீரை
கீரையை வேகவைத்து சாப்பிடுவதால், அது இரும்புச்சத்து கிடைப்பதை அதிகரிக்கிறது. அதே சமயம், இதில் காணப்படும் ஊட்டச்சத்துக்கள் அழிக்கப்படுவதில்லை
சர்க்கரைவள்ளிக்கிழங்கு
சர்க்கரைவள்ளிக்கிழங்கை வேகவைத்து சாப்பிடுவது அதன் கிளைசெமிக் குறியீட்டைக் குறைக்கிறது. இது இரத்த சர்க்கரையைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது
பச்சை பீன்ஸ்
வேகவைத்த பச்சை பீன்ஸில் உள்ள நார்ச்சத்துக்கள் செரிமானத்தை எளிதாக்குகிறது. இதில் வைட்டமின்கள் ஏ, சி மற்றும் கே போன்ற வைட்டமின்கள் போன்றவை அப்படியே இருக்கும். இவை செரிமானத்தை ஊக்குவிக்கிறது. இது நோய் எதிர்ப்பு சக்தியை ஆதரிக்கவும், எலும்பு ஆரோக்கியத்திற்கும் பங்களிக்கிறது