இரும்புச்சத்து நிறைந்த இந்த உணவுகளை கண்டிப்பாக தினசரி சாப்பிடுங்க!

By Karthick M
22 May 2025, 02:36 IST

இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை தினசரி சாப்பிட வேண்டியது மிக முக்கியம். இரும்பு சத்து நிறைந்த உணவுகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

பருப்பு வகைகளில் புரதம் மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பது மட்டுமல்லாமல், இரும்புச்சத்தும் நிறைந்துள்ளது.

பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற பிரபலமான தாதுக்கள் தவிர, கசகசா விதைகளில் இரும்புச்சத்தும் உள்ளது.

100 கிராம் சியா விதைகளில் சுமார் 7.72 மில்லிகிராம் இரும்பு உள்ளது. அதே அளவு கீரையில் 2.71 மில்லிகிராம் இரும்பு உள்ளது

முந்திரியில் 100 கிராமுக்கு 6.68 மில்லிகிராம் இரும்பு உள்ளது. அதே அளவு கீரையில் 2.71 மில்லிகிராம் இரும்பு உள்ளது.

கொண்டைக்கடலையில் சுமார் 4.7 மில்லிகிராம் இரும்புச்சத்து உள்ளது. இது ஒரு கப் பச்சைக் கீரையில் காணப்படும் அளவை விட மூன்று மடங்கு அதிகமாகும்.