உடல் எடையை வேகமாகக் குறைப்பதற்கு உடற்பயிற்சி செய்வதற்கு முன்னதாக சில ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். இதில் எடை குறைய வொர்க் அவுட்-க்கு முன்னதாக சாப்பிட வேண்டிய சில உணவுகளைக் காணலாம்.
ஓட்ஸ்
ஓட்மீலில் மெதுவாக ஜீரணிக்க உதவும் கார்போஹைட்ரேட்டுகள் உள்ளது. இது உடலுக்கு நீடித்த ஆற்றலை வழங்குகிறது. இதை உடற்பயிற்சிக்கு முன் உட்கொள்வதால் உடற்பயிற்சியின் போது எளிதில் சோர்வடைவதைத் தடுக்கிறது
பிளாக் காபி
பிளாக் காபி உட்கொள்வது உடலில் கொழுப்பை எரிக்கவும், வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. எனவே இதை உடற்பயிற்சிக்கு முன்னதாக எடுத்துக் கொள்வது மிகவும் நல்ல பானமாக அமைகிறது
வாழைப்பழங்கள்
இது பொட்டாசியம் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்ததாகும். உடற்பயிற்சிக்கு முன் வாழைப்பழத்தை எடுத்துக் கொள்வது உடலுக்கு உடனடி ஆற்றலை அளித்து, தசைப்பிடிப்பு இல்லாமல் உடற்பயிற்சி செய்ய அனுமதிக்கிறது
வேகவைத்த முட்டைகள்
இதில் உள்ள அதிகளவிலான புரதச்சத்துக்கள், தசையை உருவாக்க உதவுகிறது. இது உடற்பயிற்சியின் போது கொழுப்பை மிகவும் திறம்பட எரிக்க உதவுகிறது
பெர்ரி கிரேக்க தயிர் கலவை
கிரேக்க தயிருடன் பெர்ரி கலந்த கலவை தசை மீட்புக்கு உதவுகிறது. இது உடலை முழுதாக வைத்திருக்கும் அதே வேளையில் இதன் ஆக்ஸிஜனேற்றிகள் கொழுப்பு வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது
குறிப்பு
ஆரோக்கியமான முறையில் வேகமாக எடையைக் குறைப்பதற்கு, உடற்பயிற்சிக்கு குறைந்தது 30-60 நிமிடங்களுக்கு முன்பு இந்த உணவுகளைச் சாப்பிட வேண்டும்