ஷார்ப்பான கண் பார்வைக்கு இந்த ட்ரை ஃபுரூட்ஸ் சாப்பிடுங்க

By Gowthami Subramani
10 Mar 2025, 21:54 IST

கண் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும், கண் பார்வைத்திறனை மேம்படுத்தவும் அன்றாட உணவுமுறையில் சில உணவுகளைச் சேர்க்கலாம். அவ்வாறு கூர்மையான கண் பார்வைக்கு உதவும் சில உலர் பழங்களைக் காணலாம். இவை இயற்கையாகவே பார்வைத்திறனை மேம்படுத்த உதவும் மதிப்புமிக்க ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாகும்

முந்திரி

முந்திரி துத்தநாகம் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்ததாகும். இது விழித்திரைக்கு சேதம் ஏற்படுவதைத் தடுக்கிறது. மேலும் இரவு நேர பார்வையை மேம்படுத்துகிறது

பேரிச்சம்பழம்

இது வைட்டமின் ஏ மற்றும் கரோட்டினாய்டுகள் நிறைந்ததாகும். இதை உட்கொள்வது இது மாலை குருட்டுத்தன்மையைத் தடுக்கிறது. மேலும் பார்வையை கூர்மையாக்குகிறது

வால்நட்ஸ்

வால்நட்ஸில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளது. இது உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைத்து, அடைப்பைத் தடுப்பதன் மூலம் கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது

பாதாம்

பாதாம் வைட்டமின் ஈ ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாகும். இது கண்களை ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திலிருந்து பாதுகாக்க உதவுகிறது. மேலும் இது வயது தொடர்பான பார்வை இழப்பு அபாயத்தையும் குறைக்கிறது

திராட்சை

திராட்சையில் அதிகளவிலான பாலிபினால்கள் - ரெஸ்வெராட்ரோல் உள்ளது. இது கண்களை ஃப்ரீ ரேடிக்கல்கள் சேதத்திலிருந்து பாதுகாக்க உதவுகிறது

பிஸ்தா

இது ஊட்டச்சத்துக்கள் நிறைந்த கண்களுக்கு நல்லது செய்யும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு சுவையான சிற்றுண்டியாகும். இதில் உள்ள லுடீன் மற்றும் ஜியாக்சாண்டினின் போன்ற ஆக்ஸிஜனேற்றிகள் ஆபத்தான, அதிக ஆற்றல் கொண்ட ஒளி அலைகளிலிருந்து கண்களைப் பாதுகாக்கிறது