தேங்காய் நீண்ட நாட்களுக்கு கெட்டுப்போகாமல் இருக்க எளிய டிப்ஸ்!

By Kanimozhi Pannerselvam
30 Sep 2024, 12:30 IST

நல்ல தேங்காய்க்கான தேர்வு

தேங்காய் மிகவும் கடினமாக இருக்க வேண்டும். தேங்காய் ஓட்டில் விரிசல், புள்ளிகள் இருக்கக்கூடாது. தேங்காயின் நுனியில் உள்ள மூன்று கண்கள், புதியதாக இருக்க வேண்டும்.

சேமிப்பது எப்படி?

தேங்காயை குளிர்ந்த, உலர்ந்த இடத்தில் சேமிக்க வேண்டும். குளிர்சாதன பெட்டியிலும் சேமிக்கலாம். குறிப்பாக தேங்காயை நீண்ட நேரம் சூரிய ஒளி படும் இடத்தில் வைக்கக்கூடாது.

தேங்காயை தண்ணீரில் போடவும்

தேங்காயை தண்ணீரில் போட்டு வைப்பதால் கெட்டுப்போகாமல் இருக்கும். தேங்காயை தண்ணீரில் போடும் முன் நன்றாக சுத்தம் செய்ய வேண்டும்.

தேங்காய் துருவல்

தேங்காயைத் துருவும் போது நடுவில் இருந்து துருவவும், தவறாக துருவினால் பால் வர வாய்ப்புள்ளது. இது தேங்காய் துருவலை விரைவாக கெட்டுப்போக வைக்கும்.

உடைத்து பயன்படுத்துதல்

தேங்காயைத் உடைப்பதற்கு முன் நன்றாக சுத்தம் செய்யவும். மேலும் அதனை சரியான கருவியைப் பயன்படுத்தி உடைக்கவும். அப்போது தான் சில்லுகள் உருவாவதை தடுக்க முடியும். இவை எளிதில் கெட்டுப்போகக்கூடியவை.