சரசரனு உடல் எடை குறைய.. இந்த பானங்களை வெறும் வயிற்றில் குடிக்கவும்..

By Ishvarya Gurumurthy G
12 May 2025, 14:11 IST

உடல் எடையை குறைக்க, தினமும் காலையில் வெறும் வயிற்றில் இந்த பானங்களை குடிக்கவும். படிப்படியாக உடல் பருமன் மற்றும் தொய்வு குறைய ஆரம்பிக்கும்.

வெந்தய தண்ணீர்

ஊறவைத்த வெந்தயம் அல்லது மேத்தி விதை தண்ணீர் எடை இழப்புக்கு பெரிதும் உதவக்கூடியதாகும். இதில் சபோனின்கள், நார்ச்சத்து போன்றவை அதிக அளவில் உள்ளன. இவையே எடை இழப்புக்கு காரணமாகின்றன.

ஆப்பிள் சைடர் வினிகர்

திறம்பட உடல் எடையைக் குறைக்க ஆப்பிள் சைடர் வினிகரைப் பயன்படுத்தலாம். 200 மில்லி தண்ணீரில், 5 மில்லி முதல் 10 மில்லி அளவிலான ஆப்பிள் சைடர் வினிகர் சேர்த்து தொப்பையைக் குறைக்க காலையில் அருந்தலாம்.

இலை காய்கறி ஜூஸ்

கோஸ், செலரி, கீரை, வெள்ளரிக்காய் போன்ற பச்சை இலைக் காய்கறிகளை சேர்த்து தயாரிக்கப்படும் பச்சைச் சாறு உடல் எடை இழப்புக்கு பெரிதும் உதவுகிறது. இதில் சுவைக்காக சிறிதளவு மிளகு, உப்பு மற்றும் எலுமிச்சைச் சாறு போன்றவற்றைச் சேர்க்கலாம்.

இலவங்கப்பட்டை நீர்

இலவங்கப்பட்டை ஆரோக்கியமான மசாலாப் பொருள்களில் ஒன்றாகும். இவை உள்ளுறுப்புக் கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. மேலும் இது ஒட்டுண்ணி எதிர்ப்புப் பண்புகளைக் கொண்டுள்ளது. எனவே உடல் எடை இழப்புக்கு இலவங்கப்பட்டை தண்ணீரை அருந்தலாம்.

மல்லி விதை நீர்

மல்லி விதைகள் பல மருத்துவ குணங்கள் நிறைந்தவை. எடை இழப்புக்கும் மல்லி நீர் நன்மை பயக்கும். மல்லி தண்ணீர் குடிப்பதால் செரிமானம் மேம்படும், உடலில் சேரும் அழுக்குகள் அனைத்தும் எளிதில் அகற்றப்படும்.

சீரக நீர்

எடை இழப்புக்கு சீரக நீர் ஒரு சிறந்த வீட்டு மருந்தாக செயல்படுகிறது. சீரக நீர் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது, இது எடை இழப்புக்கு உதவுகிறது.

நீங்களும் எடை குறைக்க விரும்பினால், காலையில் வெறும் வயிற்றில் இந்த பானங்களை உட்கொள்ளலாம். இது உங்கள் உடலை நச்சு நீக்கும், மேலும் உடலில் குவிந்துள்ள கொழுப்பையும் எளிதாக அகற்றும். ஆனால் எந்த பானத்தையும் எடுத்துக்கொள்வதற்கு முன், நிச்சயமாக உங்கள் நிபுணரின் ஆலோசனையைப் பெறுங்கள்.