இரவில் நிம்மதியாக உறங்க, ஒவ்வொருவரும் வெவ்வேறு உடல் தோரணையில் தூங்குவார்கள். அதே சமயம் சிலருக்கு தலைக்கு கீழே இரண்டு தலையணைகளை வைத்து தூங்கும் பழக்கம் இருக்கும். ஆனால், அப்படிச் செய்வது சரியா? இரண்டு தலையணைகளுடன் தூங்கினால் என்ன ஆகும் என பார்க்கலாம்.
தலையணை நல்லதா?
இரவில் தலையின் கீழ் இரண்டு தலையணைகளை வைத்து தூங்கினால், உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? இதனால் நீங்கள் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கும்.
கழுத்து வலி
இரவில் மிகவும் தடிமனான தலையணை அல்லது இரண்டு தலையணைகளுடன் தூங்குவது கழுத்து வலியை ஏற்படுத்தும். இந்த பிரச்னை மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
முதுகெலும்பு மீது விளைவு
இரண்டு தலையணைகளுடன் தூங்கும் பழக்கம் உங்கள் முதுகுத்தண்டில் மோசமான விளைவை ஏற்படுத்தும். இதன் காரணமாக உங்களுக்கு முதுகுவலி பிரச்சனை வரலாம்.
இரத்த ஓட்டத்தில் விளைவு
இரவில் இரண்டு தலையணைகளை வைத்து உறங்குவது தலையில் ரத்த ஓட்டம் சீராக நடைபெறாமல் தடுக்கிறது. இது உங்கள் முடியையும் பாதிக்கலாம்.
முடி உதிர்வு பிரச்சனை
சரியான இரத்த ஓட்டம் இல்லாததால், முடி உதிர்தல் பிரச்சனையை நீங்கள் சந்திக்க நேரிடும். ஏனெனில், இரண்டு தலையணைகளை பயன்படுத்துவதால் முடிக்கு சரியான ஊட்டச்சத்து கிடைக்காது.
தோள்பட்டை வலி
இரவில் இரண்டு தலையணைகளுடன் தூங்கும் பழக்கத்தால் ஒருவர் தோள்பட்டை வலியால் பாதிக்கப்படலாம். கூடுதலாக, கைகளில் வலி தொடங்குகிறது.
என்ன வகை தலையணை நல்லது?
இரவில் தூங்கும் போது எப்போதும் சிறிய அல்லது நடுத்தர அளவிலான தலையணையைப் பயன்படுத்த வேண்டும். மேலும், மென்மையான தலையணையைப் பயன்படுத்துவது நல்ல தூக்கத்திற்கு சிறந்தது என்பதை நிரூபிக்கிறது.