கோதுமை சாப்பிடாமல் தொங்கும் தொப்பையை குறைக்க முடியுமா?

By Karthick M
24 Dec 2024, 01:50 IST

நம்மில் பலர் எடையை குறைக்க அரிசியை குறைத்து கோதுமையை உண்பார்கள். ஆனால் எடை இழப்புக்கு கோதுமையைத் தவிர்ப்பதும் அவசியம் என்று சிலர் நம்புகிறார்கள்.

உடல் எடையை குறைக்க, சரியான தேர்வு மற்றும் உணவின் அளவு இரண்டும் முக்கியம். நார்ச்சத்துடன், கார்போஹைட்ரேட்டுகளும் கோதுமையில் காணப்படுகின்றன.

உங்கள் உணவில் இருந்து கோதுமையை முற்றிலுமாகத் தவிர்த்தால், நீங்கள் பலவீனமானமாக உணரலாம். கோதுமையை சிறிய அளவில் உட்கொள்வது பிரச்சனை இல்லை.

கோதுமையில் ஏராளமான நார்ச்சத்து உள்ளது. இதனை உட்கொள்வதால் நீண்ட நேரம் பசி எடுக்காது.

புரதம், கார்போஹைட்ரேட், நார்ச்சத்து மற்றும் பல தாதுக்கள் கோதுமையில் காணப்படுகின்றன. இது உடல் சத்துக்களை அதிகரிக்கும்.

கோதுமையில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது செரிமானத்திற்கு மிகவும் அவசியம் என்று கருதப்படுகிறது.