வயிற்றில் அதிகப்படியான கொழுப்பு தேங்குவதால் தொப்பை உருவாகிறது. இதை கரைக்க நாம் கடைபிடிக்காத முறைகள் இருக்க முடியாது. வெறும் 30 நாளில் உங்கள் தொப்பையை குறைக்க உதவும் உணவுகள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
நார்ச்சத்து உணவுகள்
நார்ச்சத்து நிறைந்த உணவு பொருட்களை தினம் எடுத்துக்கொள்வது, தொப்பையை எளிமையாக கரைக்க உதவும். ஓட்ஸ், பீன்ஸ், வேர்க்கடலை, அரிசி, பார்லி, சாத்துக்குடி, ஆரஞ்சு, கோதுமை, பருப்பு வகைகள், ஆளி விதைகள் போன்றவற்றை அதிகம் சாப்பிடலாம்.
மதுவை கைவிடவும்
அளவுக்கு அதிகமாக மது பானம் பருகுவதும் உங்கள் தொப்பையை அதிகரிக்கலாம். எனவே, கனகச்சிதமான இடுப்பை விரும்புபவர்கள் மது பான பயன்பாட்டை நிறுத்துவது நல்லது.
புரதம் நிறைந்த உணவுகள்
புரதம் நிறைந்த உணவுகளை சாப்பிடும் போது, பசி கட்டுப்படும். இதனால், நாம் சாப்பிடும் அளவும் பாதியாக குறையும். எனவே, இறைச்சி, முட்டை, பால், பீன்ஸ் வகைகளை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
இனிப்பை தவிர்க்கவும்
இனிப்பு பண்டங்கள் மற்றும் உணவுகளை சாப்பிடுவது நீரிழிவு பிரச்சனை மற்றும் உடல் பருமனுக்கு வழிவகுக்கும். எனவே, நீங்கள் சாப்பிடும் உணவில் சர்க்கரையின் அளவு அதிகம் இல்லாமல் பார்த்துக்கொள்வது நல்லது.
கொழுப்பு நிறைந்த மீன்கள்
ஒமேகா - 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த சால்மன் மீன், ஹெர்ரிங், மத்தி மீன், கானாங்கெளுத்தி, நெத்திலி மீன் போன்றவற்றை அதிகம் சாப்பிடலாம். இது உங்கள் உடல் எடையை கட்டுப்படுத்தும்.
ஜூஸ்களை தவிர்க்கவும்
உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான வைட்டமின்களை பழச்சாறுகள் கொண்டிருந்தாலும், இந்த பானங்களில் பயன்படுத்தப்படும் இனிப்பு சேர்மங்கள் உடல் பருமன் மற்றும் நீரிழிவு பிரச்சனைக்கு வழிவகுக்கலாம். எனவே, இவற்றை தவிர்ப்பது நல்லது.
ஆப்பிள் சிடார் வினிகர்
அசிடிக் அமிலம் நிறைந்த ஆப்பிள் சிடார் வினிகர், அடிவயிற்று - இடுப்பு பகுதி கொழுப்பை கரைக்க பெரிதும் உதவும். எனவே, ஆப்பிள் சிடார் வினிகரை உங்கள் உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள நல்ல பலன் கிடைக்கும்.
கிரீன் டீ
ஆன்டி ஆக்ஸிடன்கள் நிறைந்த கிரீன் டீ, அடிவயிற்று கொழுப்பை குறைப்பதோடு, வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்தும். எனவே, தினமும் ஒரு கோப்பை கிரீன் டீ பருகி வர நல்ல பலன் கிடைக்கும்.