உறுப்புகள் சரியாகச் செயல்படத் தேவையான ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களைப் பெறுவதை இரத்த ஓட்டம் உறுதி செய்கிறது. இந்த இரத்த ஓட்டம் தடைபடுவதால் ஏற்படும் பாதிப்புகளில் வலி, தசைப்பிடிப்பு, உணர்வின்மை போன்றவை ஏற்படும். இதிலிருந்து விடுபட உதவும் சில ஆரோக்கியமான உணவுகளைக் காணலாம்
சிட்ரஸ் பழங்கள்
சிட்ரிக் அமிலத்தைக் கொண்ட ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்கள் அத்தியாவசிய தாதுக்கள் மற்றும் வைட்டமின்களை வழங்குவதோடு மட்டுமல்லாமல், இரத்தக் கட்டிகளைக் கரைத்து இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது
நட்ஸ்
பாதாம், வால்நட்ஸ் போன்ற நட்ஸ் வகைகளில் மெக்னீசியம் மற்றும் அர்ஜினைன் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை இரத்த நாளங்களை விரிவுபடுத்தவும், ன இரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கவும் உதவுகிறது
வெங்காயம்
வெங்காயம் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்ததாகும். இவை இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதில் நேரடியாக பங்கேற்பதன் மூலம் கை, கால்களின் தசைபிடிப்பைக் குறைக்கிறது
பூண்டு
இது இரத்த அழுத்தம் மற்றும் இதய ஆரோக்கியத்தை பராமரிப்பதில் மிகுந்த நன்மை பயக்கும். இதற்கு இதில் உள்ள சல்பர் உள்ளடக்கமே காரணமாகும். இவை இரத்த அழுத்தத்தைக் குறைத்து இரத்த நாளங்களைத் தளர்த்தி இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது
உப்பு நீர் மீன்
ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உப்பு நீர் மீன்கள் இரத்தக் கட்டிகளைத் தடுக்கவும், ஆரோக்கியமான இரத்த அழுத்தத்தைப் பராமரிக்கவும் உதவுகிறது
இந்த உணவுகளை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதுடன், ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தலாம். இது இரத்த ஓட்டத்தை பராமரித்து, இது தொடர்புடைய உடல்நலப் பிரச்சனைகளைத் தடுக்கவும் வழக்கமான உடற்பயிற்சி மற்றும் சரியான மருத்துவ பராமரிப்பு அவசியமாகும்