உங்களுக்கு ஆந்திரா மெஸ் பருப்பு பொடி பிடிக்குமா? இதோ ரெசிபி!

By Devaki Jeganathan
12 Jun 2025, 16:14 IST

சைவம் சாப்பிடும் பலருக்கு பருப்பு பொடி பிடிக்கும். சுடு சாதத்தில் பருப்பு பொடி சேர்த்து நல்லெண்ணெய் அல்லது நெய் சேர்த்து சாப்பிட்டால் அடடே அதன் சுவையை வருணிக்கவே முடியாது. வீட்டிலேயே ஆந்திரா ஸ்டைல் பருப்பு பொடி செய்வது எப்படி என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

துவரம் பருப்பு - 1 கப் (250 மி.லி கப்), கடலைப்பருப்பு - 1/4 கப், பாசிப்பருப்பு - 1/4 கப், சிவப்பு மிளகாய் - 7, பூண்டு - 6 பற்கள், பொட்டு கடலை - 2 மேசைக்கரண்டி, சீரகம் - 1 தேக்கரண்டி, கறிவேப்பிலை, உப்பு - 1 தேக்கரண்டி, பெருங்காயத்தூள் - 1/2 தேக்கரண்டி

செய்முறை படி - 1

ஒரு பானில் துவரம் பருப்பை சேர்த்து மிதமான தீயில் பொன்னிறமாகவும் மணமாகவும் வரும் வரை வறுக்கவும். பின்னர் ஒரு தட்டிற்கு மாற்றி ஆறவிடவும்.

செய்முறை படி - 2

அடுத்து கடலை பருப்பை சேர்த்து பொன்னிறமாக வறுத்து தட்டிற்கு மாற்றவும். பின்னர் பாசி பருப்பை சேர்த்து பொன்னிறமாக வறுத்து தட்டிற்கு மாற்றவும்.

செய்முறை படி - 3

அடுத்து, 6 பூண்டு பற்களை (தோலுடன்) வறுக்கவும் பின்னர் பொட்டு கடலை, சீரகம், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து வறுக்கவும். தட்டில் சேர்க்கவும்.

செய்முறை படி - 4

வறுத்த அனைத்து பொருட்களும் குளிர்ந்த பிறகு மிக்ஸியில் காம்பு நீக்கிய சிவப்பு மிளகாயை சேர்த்து, பின்னர் அனைத்து வறுத்த பொருட்களையும் சேர்த்து பொடியாக அரைக்கவும்.

செய்முறை படி - 5

அரைக்கும் போது இடையில் உப்பு மற்றும் பெருங்காயத்தூள் சேர்க்கவும். பொடியை காற்று புகாத பாட்டிலில் சேமிக்கவும். பருப்பு பொடியை சூடான சாதம் மற்றும் நெய்யுடன் சேர்த்து பறிமாறவும்.