உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான பல ஊட்டச்சத்துக்கள் பப்பாளி பழத்தில் உள்ளது. இருப்பினும், இதை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதால் பல ஆரோக்கிய சிக்கல்கள் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கருச்சிதைவு ஆபத்து
இன்றும் தேவையற்ற கருவை கலைக்க பப்பாளி பயன்படுத்த படுகிறது. எனவே, இதை கர்ப்ப காலத்தின் ஆரம்ப நிலையில் பெண்கள் சாப்பிடுவதை தவிர்க்கவும். இல்லையெனில், கருச்சிதைவு ஆபத்து ஏற்படலாம்.
நிறம் மாறுதல் பிரச்சனை
பப்பாளியை அளவுக்கு அதிகமாக சாப்பிடுகையில் கரோட்டினீமியா எனும் நிறமாற்ற பிரச்சனை ஏற்படும். அதாவது, மஞ்சள் காமாலையின் அறிகுறிகளைப் போலவே கண்களில் வெள்ளை, உள்ளங்கால்கள் மற்றும் உள்ளங்கைகள் மஞ்சள் நிறமாக மாறலாம்.
சுவாச பிரச்சனை
பப்பாளியில் அதிக அளவில் பாப்பைன் உள்ளது. இதை அதிக அளவில் உட்கொள்வதால், நாசிப் பாதையில் அழற்சி, எரிச்சல் மற்றும் மூச்சுத்திணறல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.
சிறுநீரக கற்கள்
பப்பாளி பழத்தில் காணப்படும் கனிமங்கள் சிறுநீரக கற்களின் அபாயத்தை அதிகரிக்கும். மேலும், இரத்த நாளங்களில் அடைப்பு, அழற்சி பிரச்சனைக்கும் வழிவகுக்கலாம் என கூறப்படுகிறது.
பேதி
பப்பாளி பழத்தில் அதிகளவு நார்சத்து உள்ளது. இது செரிமான மண்டல செயல்பாட்டை துரிதப்படுத்துகிறது. இதனால், வயிற்று எரிச்சல், வயிற்றுப் போக்கு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
தாய்ப்பால் சுரப்பு
பெரும்பாலும் பாலூட்டும் தாய்மார்கள் தங்கள் உணவு வழக்கத்தில் பப்பாளி சேர்த்துக்கொள்வது தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும் என நம்புகின்றனர். இருந்தாலும், ஒரு சில பாலூட்டும் தாய்மார்கள் பப்பாளி சாப்பிடுவதால் எதிர்மறை விளைவுகளை சந்திப்பதாக கூறப்படுகிறது.
மாதவிடாய் பிரச்சனை
பப்பாளி பழத்தில் காணப்படும் கனிமங்கள், இரத்தம் நீர்த்துப் போதலுக்கு வழிவகும். எனவே, பெண்கள் தங்கள் மாதவிடாய் காலத்தின் போது இந்த பழத்தை எடுத்துக்கொள்ள, இரத்தப்போக்கு அதிகரிக்கும்.
இதய ஆரோக்கியம்
பப்பாளி பழத்தின் அதிகப்படியான நுகர்வு இதய துடிப்பை குறைக்கும் என கூறப்படுகிறது. எனவே, இதய செயலிழப்பு மற்றும் மாரடைப்பு பிரச்சனை உள்ளவர்கள் பப்பாளியை தவிர்ப்பது மிகவும் நல்லது.