கருப்பு ஏலக்காய் சாப்பிடுவதில் இத்தனை நன்மைகள் இருக்கா?

By Gowthami Subramani
03 Jun 2025, 17:47 IST

மசாலா பொருளாகவும், மருத்துவ பொருளாகவும் விளங்கும் கருப்பு ஏலக்காய் பல நன்மைகளைக் கொண்டுள்ளது. இதில் கருப்பு ஏலக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் சிலவற்றைக் காணலாம்

எடை இழப்புக்கு

கருப்பு ஏலக்காய் சாப்பிடுவது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும் இது உடலில் கொழுப்பை எரிக்கும் செயல்முறையை துரிதப்படுத்துகிறது. இதன் மூலம் உடல் எடையிழப்பை ஆதரிக்கலாம்

செரிமான பிரச்சனைகள்

கருப்பு ஏலக்காய் செரிமான அமைப்புக்கு மிகவும் நன்மை பயக்கும். இது செரிமானத்தை மேம்படுத்துவதன் மூலம் வயிற்று வாயு, வீக்கம் மற்றும் மலச்சிக்கலை போக்க பெரிதும் உதவுகிறது

இதய ஆரோக்கியத்திற்கு

இந்த ஏலக்காய் இதய ஆரோக்கியத்திற்கு சிறந்ததாகும். இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், இரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்தவும் உதவுகிறது. மேலும் இது இதய துடிப்பைக் கட்டுப்படுத்துகிறது

சுவாச பிரச்சனைக்கு

சளி, இருமல் அல்லது மூச்சுத் திணறலால் அவதிப்படுபவர்களுக்கு கருப்பு ஏலக்காய் மிகவும் நன்மை பயக்கும். இது நுரையீரலில் இருந்து சளியை அகற்ற உதவுவதுடன், சுவாசத்தை எளிதாக்கவும் உதவுகிறது

மன அழுத்தத்தைக் குறைக்க

கருப்பு ஏலக்காய் மன அமைதி மற்றும் தளர்வை வழங்கக்கூடிய மன அழுத்தத்தைக் குறைக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது. இதன் மூலம் மன அழுத்தத்தைக் குறைக்கலாம்

முடி ஆரோக்கியத்திற்கு

கருப்பு ஏலக்காய் முடிக்கு நன்மை பயக்கும். இது வேர்களில் இருந்து முடியை வலுப்படுத்தவும், முடி உதிர்தலைக் குறைக்கவும், பொடுகு பிரச்சனையிலிருந்து நிவாரணம் அளிக்கவும் உதவுகிறது

சரும ஆரோக்கியத்திற்கு

கருப்பு ஏலக்காய் சருமத்திற்கு பளபளப்பு மற்றும் நிறத்தை மேம்படுத்துவதுடன், முதுமை அடைவதால் ஏற்படும் சேதத்திலிருந்து சருமத்தைப் பாதுகாக்கிறது

எப்படி சாப்பிடுவது

கருப்பு ஏலக்காயை வெந்நீர் அல்லது தேநீரில் சேர்த்து குடிக்கலாம். இது தவிர, கருப்பு ஏலக்காயை மென்று சாப்பிடுவதும் நன்மை பயக்கும்